Skip to main content

Posts

Showing posts from March 13, 2016

ரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.

ரெ.கார்த்திகேசு இலக்கிய அரங்கம் 20.3.16ல் மலாயா பல்கலையில் ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு அவர் கதைகளின் ஊடாக ஒரு பயணம்.) கதை 3 ரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.  நான் முன்னர் சொந்த வீடு கட்டி வாழ்ந்த இடத்தில் மூன்று நான்கு வீடுகள் இருந்தன. புற நகர்ப்பகுதியிலிருந்து தள்ளி இருந்த ஒரு தனித்த நிலப்பகுதி அது. என் அண்டை வீட்டில் குடியிருந்த என் மகன் வயதையொத்த ஒரு பையன் எங்களோடு நட்பானான். மெல்ல  நெருக்கமாகி, குடும்பத்தில் இன்னொரு உறுப்பினனானான். அவன் படித்து முடித்து கோலாலம்பூரில் வேலைக்கான பிறகும், தொடர்பு அறுந்து விடவில்லை.  அவ்வப்பொது திரும்பும்போது, தவறாமல் நலம் வசாரித்துவிட்டுத்தான் போவான். பெரு நகர வாசம் அவனை வெகுவாக மாற்றியிருந்தது. ஒருமுறை வரும்போது  அவன் காதல் முறிந்து கனத்த சோகத்தோடு இருந்தான். என்ன ஆச்சு? என்று விசாரித்தேன். விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் தானாக உடைந்து கொட்டித்தீர்க்கும் தன்மை கொண்டததுதானே காதல் சோகம்.  காதல் தோல்விகள் அதீத சோகத்தைத் தனக்குள் பிதுங்கப் பிதுங்க அமுக்கி வைத்திருக்கும். அவன் தன் சோகத