Skip to main content

Posts

Showing posts with the label 3. சை. பீர் முகம்மது எனும் இலக்கிய வம்பாளி

3. சை. பீர் முகம்மது எனும் இலக்கிய வம்பாளி

  சை. பீர் முகம்மதுவை நான் முதன் முதலில் சந்தித்தது கூலிம் தியான ஆஸ்ரமத்தில்.  என் நிஜம் என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு அங்கே வெளியிட ஏற்பாடாகியிருந்தது. 1999 வெளியான அந்நூலின்  பின்னட்டையில் என்னை அறிமுகம் செய்து எழுதியிருந்தார்.  என் நூல் வெளியீட்டுக்கு அவரை அழைக்கவில்லை. மனிதன் தொலைதூரத்திலிருந்து வரவேண்டுமே என்ற காரணத்தால் அவருக்குச் தகவலை மட்டுமே அனுப்பியிருந்தேன். ஆனால் நிகழ்ச்சி துவங்க ஐந்து நிமிடத்துக்கு முன்னால் அவருடைய பழைய மெர்சடிஸ் ஆஸ்ரம வளாகத்துக்குள் நுழைந்தது. அதில்தான் அவருடைய வேரும் வாழ்வும் பெருந்தொகுப்பை அறிமுகம் செய்ய ஜெயகாந்தனை மலேசிய முழுதும் ஏற்றி வலம் வந்தார். சிரித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கியவரை ஓடிப்போய் வரவேற்றேன். "என்னையா இது வரேன்னு ஒரு வார்த்தை சொல்லலியே" என்றேன். அவருடன் சிங்கப்பூர் மணிமாறன், கவிஞர் க. இளமணி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.  அப்போதெல்லாம் கைப்பேசி  கிடையாது. எல்லாம் கடிதப் போக்குவரத்துதான். கடிதம் பற்றிச் சொல்லும்போது அவர் கையெழுத்தின் கலையழகு நினைவைத் தட்டுகிறது. கையெழுத்து முத்து முத்தாய் எல்லாம் இருக்கா...