காசி விஸ்வநாதர். கால பைரவனை அடுத்து காசி விஸ்வநாதனைப் பார்க்கவேண்டும். அங்கே எவ்வளவு நேரம் பிடிக்கும்? என்ற கேள்வி மனதை துளையிட்டுக்கொண்டிருந்தது. வயிற்றில் எடுக்கும் பசி, பசித்துப் பசித்தே அடங்கிவிட்ருந்தது. அவ்வப்போது குளிர்பானத்தை ஊற்றி உந்திந் தீயை அழித்துக் கொண்டிருந்தபடியால் பசிக்கு பசியே எதிரியாகிவிட்டது போலும். நான் சரத்திடம் ஒரு வேண்டுகோலை வைத்தேன். இனிமேல் இப்படி அழுக்கான இடத்துக்குக் கொண்டு போகவேண்டாமென்று. அதனை அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சுற்றுப்பயண நிறுவனம் சொன்ன இடங்களைக் காட்டியே ஆகவேண்டும் என்ற அட்டவணையைக் கறாராகக் கடைபிடிப்பவராக இருந்தார். எங்களோடு வந்தவர்கள் கூட அட்டவணையை மீறி நடக்கக்கூடாது என்றும் கறாராக இ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)