Skip to main content

Posts

Showing posts from December 8, 2013

15. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

நதியின் பிழையன்று மனித நம்பிக்கை மறுப்பது . கங்கையில் நடப்பதை நேரில் பார்க்கும்போது நமக்குக் கோபம் வருகிறது. கோடான கோடி மக்களுக்கு நீரினால் உண்டாகும் நன்மைகளைக் கருதாமல் அதனை அசுத்தப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று கேட்கத் தோணுகிறது. ஆனால் நம்பிக்கைதான் கடவுள் என்ற சொற்றொடரைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். மக்கள் எதனை தரிசிக்கிறார்களோ அதன் மேல் முழு நம்பிக்கை வைக்கிறார்கள். அந்த நம்பிக்கை அவர்களுக்குப் பலன் அளிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் வைத்த நம்பிக்கை மனத்தின் வலிமையாக மாறுகிறது. வலிமை ஆற்றலாக உருவெடுக்கிறது. முழு ஆற்றலாலும் முயற்சியினாலும் அவர்கள் எதிர்பார்த்த ஒன்று நடந்துவிடுகிறது. அதில் தனிமனித ஆற்றலும் செயல் திறமும் இருக்கிறது என்பது கண்கூடு. ஆனால் எல்லாம் இறைவன் செயல் என்றே, அவர்கள் அடையும் பலனை இறைவனின் கொடை என்றே கருதுகிறார்கள். இங்கேதான் இறைபக்தி பன்மடங்காகிறது. கங்கை அரோக்கியமற்ற நிலையில் இருப்பது இதே காரணத்தால்தான். கங்கை எல்லா அசுத்தங்களையும் தூய்மையாக்குகிறாள். கங்கை எல்லா பாவங்களையும் தீர்க்கிறாள்.கங்கை எல்லாரையும் பாதுகாக்கிற