Skip to main content

Posts

Showing posts from April 10, 2016

சிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3

  சிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு-                                                   பாகம் 3                எனக்குப் புது இடம் என்றால் கொஞ்சம் அலர்ஜி. தூக்கம் பிடிக்கவில்லை. நான் பின்னிரவு இரண்டு மணிக்குமேல்தான் தூங்கிப்பழக்கம். இந்த உடல்  அதற்குப் பழகிவிட்டது. வானொலியில் அலைவரிசை தேடிக்கொண்டிருந்த விதாயாசகர் வானொலியில் கைவைத்த படியே ஆழ்நிலை தியானத்துக்குள் போய்விட்டார். தூக்கமெல்லாம் ஒரு கொடுப்பினை. எனக்கு எப்போது தூக்கம் வருமோ? அங் மோகியூ நூலக்த்தின் தமிழ்ப்பகுதியின் ஒரு மூலை.    "காலை 9.30க்கெல்லாம் நாவல் பயிலரங்கு ஆரம்பித்துவிடவேண்டும் பாஸ்".  என்று பாலுமணிமாறன் எச்சரிக்கை  கொடுதபபடிதான் முதல் நாள் வழியனுப்பி வைத்தார். எட்டு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகிக்கொண்டிருந்தேன். வித்யா "யான்யா அவசரப்படுற...சொன்ன நேரத்துல தொட்ங்காதுய்யா," என்றார். "இது என்ன மலேசியாவா?" என்றேன். "ஆசியா ஊர் கலாச்சாரமெல்லாம் அப்படித்தான் இருக்கும்," என்றார். ஒன்பதுக்கெல்லாம் டேக்சி பிடித்து ஆங் மோ கியூ நூலகத்தைப் பிடித்தாயிற்று. எங்களுக்கு முன

சிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2

சிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2 முதல்நாள் கலந்துரையாடலைப் பற்றி இராஜ கணேஷின் முகநூல் பதிவு தெளிவாக இருந்தது. நானும் எழுதினால் சுவை திகட்டிவிடலாம். எனவே நான் நேற்று எழுதிய பதிவில் லிங்க் கொடுத்திருக்கிறேன். Balu Manimaran   என்ற முகநூல் தளத்தில்  வாசிக்கலாம். மலேசிய இலக்கியம் குறித்து பெரும்பாலான தீவிர எழுத்தாளர் பார்வை ஒன்று போலத்தான் இருக்கும். ஆனால் மலேசிய இலக்கியத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பவர் ஒரு சிலர் மட்டுமே. அவர்கள் இலக்கிய அமைப்புகள் வழி பதவியைப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் அமைப்பின் பெய்ர் காப்பாற்றப்படவேண்டுமல்லவா? ஒருமுறை ஒரு தினசரி பத்திரிகை ஒரு அறிக்கை விட்டிருந்தது. சிறுகதை பக்கத்தில் அவ்வறிக்கையை வாசிக்க நேர்ந்தவுடன் எனக்குக் கடுப்பைக் கிளர்த்தியது.  சிறுகதை எழுதுபவர்கள் நான்கு பக்கங்களுக்குள் எழுதினால் மட்டுமே பிரசுரமாகும், அது பாதி பக்கத்துக்குள் வரவேண்டும் என்று குறிப்பிடிருந்தது அறிக்கை.  உப்பு, புளி, மிளகாய், கடுகு, தாளிப்பு, சோம்பு இவற்றை நிரப்பும் ஜாடியாக பத்திரிகை பக்கத்தை அளவோடு ஒதுக்குகிறார்கள் எடிட்டர்கள், நிர்வாகி

சிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.

சிங்கப்பூரின் தங்கமீன்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னால் சிங்கப்பூர் தங்கமீன் வாசகர் வட்டத்திலிருந்து கவிஞர் பாலு மணிமாறன் அழைத்திருந்தார்.ஏப்ரல் 9 /10 தேதிகளில் சிங்கை வரமுடியுமா என்று கேட்டிருந்தார். நாவல் பயிலரங்கு நடத்தித் தரவேண்டும் என்று கேட்டார். எனக்குத் சற்று திகைப்பை ஊட்டியது அவர் கேட்டது. பிரபஞ்சன் வருவதாக அறிவிப்பு வந்ததே என்றேன். உடல் நலக்குறைவால் அவர் பயணம் செய்ய இயலாது என்றார். அவரிடம் இட்ட பணியைத்தான் உங்களிடம் தருவதாக இருக்கிறேன் நீங்கள் வரவேண்டும் என்றார். அதில் கட்டாயம் என்ற வார்த்தை சேர்க்கவில்லையே தவிர தொனியில் அது தெறித்திருந்தது. என்னால் அதனை ஏற்கவும் முடியவில்லை இழக்கவும் மனமில்லை. நான் திணறினேன் பதில் சொல்ல. "சும்மா வாங்க பாஸ், ரொம்ப யோசிக்காதீங்க, உங்கள் திறமை எனக்குத் தெரியாதா!".என்று என்னை ஏற்றிவிட்டார். நான் சரி வருகிறேன் என்று சொல்லிவிட்டு பின்னால் பதற்றத்தையும் ஏற்றிக்கொண்டேன்."எப்போ நிகழ்ச்சி?" என்றேன். 9/10 தேதிகளில் என்றார். எண்ணிப்பார்த்தேன் பத்தே நாட்கள்தான் எஞ்சி இருந்தன. ஒரு நாள் கருத்தரங்கு என்று  சொல்லிப்பார்த்தேன். மனம் ப