Skip to main content

Posts

Showing posts from January 30, 2011

தூவானம் , பா.அ.சிவம்

மௌனம் சிற்றிதழில் வெளியான என் பேட்டி தொடர்பான... கோ.புண்ணியவான் : சிறு குறிப்பு ‘ மெளனம் ’ , கவிதை பேசும் இதழ் என்பதை மீண்டுமாய் நிரூபித்துள்ளது. கவிதைக்கும் கவிஞனுக்கும் என்ன செய்ய வேண்டுமோ அதை மெளனம் நிறைவாகவே செய்துகொண்டு வருகிறது. ஒவ்வொரு கவிஞனுக்குள்ளும் கவிதையும் கவிதை இதழும் எப்படியெப்படியெல்லாமோ வரவேண்டுமோ, அப்படியே மெளனம் இதழ் வெளிவருகிறது. மெளனம் இதழின் மூலம் நல்ல கவிதைகள் முன்னிறுத்தப்படுவதையும் அதைப் பற்றி விவாதிப்பதையும் தரமான இரசிகர்கள் வரவேற்கிறார்கள். அந்த வகையில், கடந்த மெளனம் இதழ், எழுத்தாளர் கோ.புண்ணியவானின் சிறப்பிதழாக வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி. இதுபோன்று இதர கவிஞர்களின் சிறப்பிதழ்களும் தொடர்ந்து வர வேண்டும். அதனை மெளனம் செய்யும் என்றே நான் எண்ணுகிறேன். இதுபோன்ற நகர்த்தல்கள் மிகவும் அவசியம். இல்லையேல், நாம் காலம் காலமாகத் தமிழகக் கவிஞர்களின் நேர்காணல்களையும் அனுபவங்களையும் மட்டுமே வாசித்து, மனம் நெகிழ்ந்து, பாராட்டி மலேசியத் தமிழ்க் கவிதை உலகோடு ஒப்பிட்டுத் தூற்றிக் கொண்டிருப்போம். கோ.புண்ணியவானோடு இது நின்று விடக்கூடாது. இங்குப் பலர் இருக்கின்றனர். அவர்

நாற்காலியின் எண்ணற்ற கால்கள்

கோ.புண்ணியவான்     நகராத நாற்காலி    நகர்த்திகொண்டே இருக்கிறது    பிட்டங்களை   பிட்டங்களை   நீண்ட நாளைக்கு   இருத்துவதில் உடன்பாடற்று   பல சமயங்களில்   அமளி செய்கிறது   சில நேரம்   சிலுவைக்கு அனுப்பிவிடுகிறது   நாற்காலி உயர்திணையாகி  அமர்ந்தவனை  அக்றிணையாக்கிவிடுகிறது  அடிக்கடி ஆளைமாற்றும் ஆசை நாயகி விபச்சாரி  என்ன விலைக்கும் தன்னை விற்கும் விலைமதிப்பற்ற விலைமாது  நான்கு கால்கள் ஏன்? இரண்டு கால்களைச் சமாளிக்க வேண்டுமே !  ஒருகால்..... அவருக்கா? அல்லது இவருக்கா? அவரோ இவரோ தோற்றவன் ஒரு காலை பிடுங்கிக்கொள்ள வென்றவன் மூன்று கால்களோடுதான் அமர்கிறான் !  இனம் இனத்தோடுதானே சேரும் அதனால்தான் இவனும் மரமாகிறான். ‘ஒரு இடைவேளைக்குப்பிறகு  மீண்டும் சந்திப்போம்’  நாற்காலியிருந்துதான்  தொடங்கியதோ!  காலி செய்வதற்குத்தானே நாற்...காலி ! Ko.punniavan@gmail.com