Skip to main content

Posts

Showing posts from November 16, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 22

சாருக்கானையும் கஜோலையும் டிடல்டிஸ் மலை உச்சியில் பார்த்தோம். தில்த்திஸ் மலையின்  உயரம் 10,000 அடி. நான் கேபல் காரில் பயணம் செய்த அனுபத்தில் இதுதான் ஆக உயர்ந்த இடம். லங்காவித்தீவில் தொங்கும் பாலத்தில் நடப்பது விநோத அனுவம் என்றால், இந்த மலையுச்சியில் உறை பனிமலைகளைப் பார்ப்பது இன்னொரு அனுபவம். சுவிட்சர்லாந்தில் இந்த டில்ட்டிஸ் மலை மிகப் பிரபலமானது.  ஏஞ்ஜல்  பெர்ட் கேபில் கார் என்று இதனை அழைக்கிறார்கள். இதுதான் உலகத்திலேயே முதன் முதலாக  நிர்மானிக்கப்ப்பட்ட கேபில் கார் சுற்றுலாத்தளம். கோடை காலத்திலும் டில்டிஸ் மலை உச்சி  சைபர் டிகிரி செல்சியஸ் வரை இறங்கி இருக்கிறது. குளிர்காலத்தில அநேகமாக இங்கே யாரும் போக மாட்டார்கள் என்றே சொல்கிறார்கள். கேபில் கார் இரண்டு இடங்களில் நிற்கிறது. முதல் இடம் 6000 அடி உயரத்தில் நிற்கிறது. இங்கே இந்திய உணவு வகையான பிரியாணி உணவகம் பார்த்தோம். வெள்ளையர்கள் இன்றைக்கு பிரியாணி வகை உணவை விரும்பு உண்கிறார்கள் என்பது பல இடங்களில் பார்க்கமுடிகிறது. அடுத்த கேபில் கார் 10000 அடி உயரத்தில் நம்மை இறக்கிவிடுகிறது. 6000 அடி உயரத்தில் இறங்கிய போதே குளிர் ஆற

முத்தங்கள் நிறைந்த தேசம்- முத்தம் 21.

 திகட்டத் திகட்ட சுட்ட பன்றி இறைச்சி- முத்தம் 21 லுசேனிலிருந்து கிளம்பியபோது இரவு மணி எட்டு இருக்கும். ஆனால் வெளிச்சமாகத்தான் இருந்தது. இரவு 9 மணிக்குத்தான் இருள் மெல்லப் பரவத் தொடங்கும். மழை மெல்லிய  இசைபோல இதமாகப் பெய்யெத் தொடங்கியது. சாலை இன்னும் கருமையாகி  மின்னியது. மழையின் நனைவில் ஈரப்பசை கூடியிருந்தது. கார் ஈரப்பசையில் நகரும்போது வழுக்கிவிடுமோ என்ற அச்சம் ஊடுருவிச்சென்றது. இருள் சூழச் சூழ நிலத்தின்  அழகு மங்கி மறைந்துகொண்டிருந்தது. வெளிநாட்டுக் கார்கள் அனைத்திலும் ஜி.பி.எஸ் வழிகாட்டி கருவியிருக்கும். நம் இலக்கு எது என்று அதனுள் பதிவு செய்துவிட்டால் நேர்த்தியாகவே நம்மை இலக்கி நோக்கி அழைத்துச் சென்று சேர்த்துவிடும். முதல் நாள் நாங்கள் பயணம் செய்யும் போது அது உதவியாகத்தான் இருந்தது என்றாலும். நம் பண்பாட்டிலேயே நாம் ஊறியவர் என்பதால் அதன் மனநிலையிலேயே இருந்தே வெளியூர்களை அவதானிக்கிறோம். எத்தனை மணியானால்  என்ன கடைகள் விடுதிகள் கதவு திறந்தே இருக்கும் என்ற எண்ணம் அயலகத்தில் செல்லாது. முதல் நாள் இரவு ஜி.பி.எஸ்ஸை பயன்படுத்தி இரவு பதினொன்று வரை விடுதியைத்