Skip to main content

Posts

Showing posts with the label கரிகாற்சோழன் விருதும்.

ஜோர்ஜ் டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும், கரிகாற்சோழன் விருதும்.

 3. ஜோர்ஜ் டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும், கரிகாற்சோழன் விருதும்.   ஜோர்ஜ்டௌன் இலக்கிய விழாவில் இரவு விருந்து முடிந்து நான் விக்டோரியா இன் ஓட்டலில் தங்கிவிட்டேன். நல்ல வசதிகள் கொண்ட அறை.குறைந்தது 4 நட்சத்திர தகுதிகொண்ட விடுதி அது. விருந்தின்போது என்னிடம் இரண்டு  உரைகள் கொடுக்கப்பட்டன. திறந்துபார்த்தால் இரண்டிலும் பண நோட்டுகள். நான் கலந்துகொள்ளப்போகும் இலக்கிய உரையாடலுக்கு வழங்கப்பட்ட சன்மானம்.  தொகை சற்றே அதிகமானது. எழுத்தாளர்கள் கூடி இருந்ததால் அந்தப்புராதன வளாகம் வனப்பு கூடி இருந்ததாக இரவு உணவின் போது உணர்ந்தேன்.இப்போது அதன் அழகு‌மேலும் ஒருபடி கூடி இருப்பதாக உணரவைக்கிறது. 24.11.22 இரவு விருந்தில் ஜோர்ஜ்டௌன் இலக்கிய விழாத் தலைவர் போலினோடு  மணி 12 வாக்கில் ஜெயமோகனையும் அருண்மகிழ்நனையும் )என்ன அழகான பெயர்) ஏற்றிக்கொண்டு பிரம்ம வித்யாரண்யம் பயணமானேன்.  பாண்டியன் அருண்மொழியையும், லதாவையும், லோஷினியையும் ஏற்றிக்கொண்டார், மதிய உணவை பட்டர்வர்த்தில் சாப்பிடலாம் என்றே திட்டம் (எப்போதுமே உணவு விஷயத்தில் மட்டும் முன்திட்டம் போடுவதில் கவனமாகத்தான் இருக்கிறோம்).ம...