Skip to main content

Posts

Showing posts with the label 5.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும்.

ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும்.

5.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும். சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யத்திலிருந்து  காரை ஓட்டிக்கொண்டு மலையிலிருந்து கீழிறங்குவது ஓர் இனிமையான அனுபவம்.  பச்சை பூத்து மலர்ந்து நிலைத்த நிலம். வானத்தில் நீலத்தை மறைத்து தன் நிறத்தையே முன்னிலைப்படுத்துக்கொள்ளும் சுயநலம். செம்பனைக் காட்டின் நடுவே கடல் நாகம்போல வளைந்து  நெளிந்து கீழிறங்கும் தார் சாலை. முன்னர் மண்சாலை.வழி நெடுக்க சாலையைத் தொட்டு வழியனுப்பும் செம்பனை இலைத் தோரணம். செம்பனைப் பழங்கள் ரத்தச் சிவப்பில் குலையாய்  குலையாய் தாய்மை பொங்கி நிற்கும். அடி மண்ணிலிருந்து கிளம்பி மட்டைகளுக்கிடையே குடிபெயர்ந்துவிட்ட கரிய வைரக்கல் என பழுக்கக் காத்திருக்கும் செம்பனை குலைகள்.  செம்பனைக் காட்டுக்குள் நுழைந்தாலே குளிர்மை அப்பும். நான் செம்பனை எஸ்டேட்டில் வேலை செய்தவன், எனவே பார்த்தாலே பசுமை நிறைந்துவிடும். இந்தப் பசுமைப் பயணம் மேலும் சற்று நேரம் நீடிக்கக்கூடாதா என்று மனம் ஏங்கும். நான் நேராக ஜோர்ஜ்டௌன் விக்டோரியா கார்டன் விடுதியை அடைந்தேன்.  பினாங்கு அனைத்துலக இலக்கிய அமைப்பு கொடுத்த வசதியை அந்த வி...