Skip to main content

Posts

Showing posts from October 13, 2019

மலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கத்துக்கு அக்கினியாக தகித்தவன்

புதுக்கவிதைக்கான அடிநாள் கவிஞன் அக்கினி கோ.புண்ணியவான் . எனக்கும் அக்கினிக்கும் அவ்வளவு நெருக்கமான நட்பு நிகழ சந்த்ரப்பங்கள் குறைவாகவே இருந்தன. நான் கூலிமுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் வளர்ந்தவன். அக்கினி வாழ்ந்தது கோலாலம்பூரில். அப்போதுள்ள பொருளாதாரச் சூழலில் எனக்கது நியூ யோர்க் தூரம். தோ இருக்கிற கூலிமுக்கு போவதே மாதம் ஒருமுறைதான் நிகழும். ஆனால் கவிதையில் எனக்கு அவர் மிக அண்மையில் இருந்தார்.   புதுக்கவிதை மலேசியாவுக்கு அறிமுகமானபோது உதித்த முதல் தலைமுறை கவிஞர் அக்கினி. பல போராட்டங்களின் சிதைவுகளிலிருந்து புதுக்கவிதையைக் கட்டியெழுப்பியவர்களிலன் பட்டியலில் அக்கினியும் சேர்கிறார். அதன் நீட்சியாக இரண்டாம் தலைமுறையில் நான் உதிக்கிறேன். நான் பரீட்சார்த்தமாக அக்கவிதை வடிவத்தை எழுதிப் பார்த்தேன். வானம்பாடி வாரப் பதிரிகைக்கும் அனுப்பினேன் , அவை தவறாமல் பிரசுரமாயின. அக்கினி , ராஜ்குமாரன் , இளஞ்செல்வன் , ஆதி.குமணன் , கோ.முனியாண்டி போன்றவர்களை அடியொற்றி   உருவானவன் நான். அவர்களுடைய கவிதைதான் எனக்கு பால பாடம். தமிழ் நாட்டிலிருந்து எழுதும் பிரசித்திபெற்ற   கவிஞர்களா...