Skip to main content

Posts

Showing posts from June 12, 2016

தீக்குள் விரலை வைத்தால் (சிறுகதை)

                                                  தீக்குள் விரலை வைத்தால்                                                                 (சிறுகதை)                                                                                          கோ.புண்ணியவான், மலேசியா                                       கடைசியில் காவல் நிலையம் வரை போக வைத்துவிட்டது. மனம் ஒப்பவில்லைதான். ஆனாலும் இதனை விட வேறு விதியற்றுதான்  கால்கள் மிகுந்த கூச்சத்தோடும் தயக்கத்தோடும் வந்தடைந்தன. காவல் நிலையம் சமூகப் பாதுகாப்பு அரண் என்பதையும் மீறி  குற்றமுள்ளவர்களைப் தேடிப்பிடித்து அடைக்கும் இடம் என்ற ஆகிப்போனதுதான் காரணம். யார் மனதில் குற்றமில்லை?                               என் மகனைப் பார்க்குந்தோறும் மனம் துணுக்குற்றது. அவனின் வாடிய முகத்தை சாதரணமாகக் கடந்துவிட முடியவில்லை. கொண்டாட்டக் கலை நிறைந்த முகம் அவனுடையது. சதா பேச்சில் துள்ளலும், உடல்மொழியில் களிப்பும் வெளிப்படும். இந்த இரண்டாண்டு காலமாக அந்தக் களிப்பு மண்ணில் மெல்ல மெல்ல சாய்ந்து வீழ்ந்துகொண்டிருக்கும் வாழைமரம் போல வாடிக் களைத்துக் கிடந்தது. முன்பு போல