குழப்பம் 7 ஜெயமோகனின் அடுத்த நிகழ்ச்சி பினாங்கு மாநிலத்தில் மற்றுமொரு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி நடப்பதாய் இருந்து அவர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே அது ரத்தாக்கப் பட்டிருந்தது. எனவே அன்றைய தினம் அவர்கள் மூவரையும் மலேசியக் காடு ஒன்றுக்குள் நுழைந்து இயற்கை தரும் சுகத்தில் அனுபவிக்க வைக்கலாம் என்ற எண்ணம் துளிர்ந்தது. காட்டைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை மூவருக்குள்ளும் எழுந்ததுகூட வியப்படையச் செய்யும் ஒன்றல்ல. நாங்கள் ஊட்டி, ஏற்காடு இலக்கிய முகாமில் கலந்துகொண்டபோது மாலை காலை வேளைகளில் ஊட்டி காட்டுக்குள் அவர்களோடு காலாற நடந்த இனிய நினைவுகளின் நீட்சியாகவே இதனைக் கருதினேன். மலேசியா அசுர மேம்பாட்டு வேகத்தில் காட்டு நிலங்களை அழித்து ஆயிரக் கணக்கில் வீடுகளையும், சில புதுப்பட்டணங்களையும், விமான நிலையங்களையும் நிறுவிய படியே இருக்கிறது. புத்ரா ஜாயா என்ற புதிய அரசாங்க இலாகாக்களின் பட்டணமாக எழுந்து நிற்கும் இடம் முன்னர் ரப்பர் தோட்டமும் காடும் நிறைந்த இடமாகும். கோடிக்கணக்கான பணம் கொட்டி நிறுவப்பட்ட ஊர். அது இன்றைக்கு தமிழ் இந்தி மலையாளம் தெலுங்கு சினிமாவுக்குக்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)