Skip to main content

Posts

Showing posts with the label ஜெர்மனியில் தவறுதலாக விடுதியை முன்பதிவு செய்துவிட்டோம்.

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 20

ஜெர்மனியில் தவறுதலாக விடுதி முன்பதிவுசெய்து சுவிசர்லாந்தில் தேடிக்கொண்டிருந்தோம். மன்னிக்கவும் ..சியாசோவிலிருந்து காரில் பயணிக்கவில்லை. அங்கிருந்து லுகானோவுக்கு புல்லட் டிரேய்னில் வந்து அங்கிருந்தே காரை வாடகை எடுத்து சுவிசைச் சுற்ற ஆரம்பித்தோம். இந்த புல்லட் ட்ரேன் மிக நூதன வசதிகளைக் கொண்டது. அசைவு அறவே தெரியாமல் பறந்தது. லுகானோவில் விடுதி எடுக்க முடியவில்லை. எனவே தொடர்ந்து பயணிக்கலாம் என்று முடிவெடுத்தோம். சுவிஸ் மலைகளும், நீர்வீழ்ச்சிகளும் அழகிய பெரியகுளங்களும் அடர்ந்த ஊர். அந்நாந்து பார்த்தால் கூம்பு கூம்பாக முளைத்த பச்சை மலைகளும், அதற்கும் மேலே பனி படர்ந்து உலவும் மலை முகடுகள். முகடுகளை முக்காடிட்ட பனிப்படலங்கள்.மலைகளுக்கு கீழே பெரும் பெரும் ஏரிகள். பச்சை நிறத்தில் மனதைக் கவ்வும் நீர்த்தேக்கங்கள் நம்மை கண்மாறாமல் பார்க்க வைக்கின்றன. ஏரிகளைச் சுற்றி பெரும் பட்டினங்கள் எழும்பி இருக்கின்றன. எத்தனையோ 100 மைல்கள் பயணத்தில் நெடுக்க இதனைப் பார்க்க முடிகிறது. இதனை கிராமப் பகுதிகள் என்றே சொல்கிறார்கள். ஆனால் இங்கேதான் தங்கும் விடுதிகளும், உணவுக்கடைகளும். உல்லாச மதுக் கடைகளும்...