Skip to main content

Posts

Showing posts from February 5, 2012

ஆயாக்கொட்டா(சிறுகதை)

                                      (மலேசியத் தோட்டப்புற சூழல் சிறுகதை)        ஆயக்கொட்டாயில நஞ்சானும் குஞ்சானுமா கெடக்கிற புள்ளங்கில கருக்கல்லியே வுட்டுட்டு போற தோட்டத்துச் சனங்க வேல வுட்டு வந்த , கடசி ஆளு  புள்ளய தூக்கும்போது லயத்துக் காட்ல ‘மினுக்கிட்டான் பூச்சி கணக்கா, மினுக் மினுக்குன்னு மண்ணெண்ண வெளக்கு அமிஞ்சிரட்டுமா அமிஞ்சிரட்டுமான்னு கேக்குற மாறி எரியும். கித்தா மரம் வெட்டப் போறதுங்க மணி ஒன்னரைக்கெல்லாம் வந்திடுங்க -ஒத்த வெட்டுன்னா. வெயில் காயுறு நாள்ளயும் வெல்லென வந்துடுங்க. பாதி நேரத்துல மல பிடிச்சிருசின்னா சுருக்கா வந்திடுங்க. கித்தா மரம் வெட்றதிலியும் சிலது இருக்குங்க , சந்தடி இல்லாம் வேல முடிஞ்சி வூட்டுக்குப் போயி , சமச்சி, தொவச்சி , ஏறக்கட்டி வச்சிட்டு , குளிச்சி முழுவி மூஞ்சில திப்பி திப்பியா பகுடர பூசிக்கிட்டுத்தான் புள்ளய தூக்க வருங்க. அன்னிக்கி டபுல் வெட்டுன்னாதான் ஆயா பொலப்பு நாறிப்போயிடும். டபுல் வெட்டு முடிஞ்சி ஸ்டோர்ல பால் ஊத்திட்டு வந்து புள்ளய தூக்கறப்ப மேக்க சூரியன் பழுத்த கொய்யாப் பலமாட்டும் செவந்து எறங்கும்.  கித்தா பால் நாத்தத்தோட புள்ளைங்கள தூக்கும்போ