Skip to main content

Posts

Showing posts from August 28, 2016

அக்கினிக் குஞ்சு- சிறுகதை

                                                          அக்கினிக் குஞ்சு                                                                (சிறுகதை)                      இரும்புக் கம்பிக் கதவுக்குள்ளே தள்ளப்பட்டதும் கதிர் வெடவெடத்துப் போனான். பீதி மெல்ல மேல்ல ஊடுறுத்து மனம் முழுவதும் விஷச் செடிபோல பரவித் தைத்தது. அவர்கள் அடுத்து தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்பதை நினைக்கும்போதே உடலுக்குள் பீதி இழை இழையாய்ச் சரிந்து இறங்கியது.  உடலின் நடுக்கம் குரல்வலையை அடைத்து வார்த்தைகளை பிசிறச் செய்தன. பல சமயங்களில் அவன் சொல்ல நினைப்பவை சிதறி  உதிர்ந்தன. சிலுவாரையும் சட்டையையும் கழட்டச் சொல்லிக் கட்டளை பிறப்பித்தான் ஒரு போலிஸ். முதலில் சிலுவாரைக் கழட்ட பின்வாங்கினான். ஒரு புஜம் திரண்ட போலிஸ்  ‘”புக்கா” என்று அதிகாரத்தில் மிரட்டியதும் அவன் நடுங்கி சிலுவார் பட்டனை அவிழ்த்து  ஜிப்பை கூச்சத்தோடு  இறக்கினான். சிலுவார் அகன்று கொடுத்ததும் தொளதொளத்து கீழிறங்கியது. அவன் வெளிறிய தொடைகளை அவனுக்கே பார்க்கக் கூசியது.  முன்பின் முகமறியா ஆடவர் முன்னால் சிலுவாரைக் கழட்டுவது பெண்கள் பார்க்க உடை அவிழ்ப்