Skip to main content

Posts

Showing posts from June 12, 2022

கவிதைகளால் நிரப்பப்பட்ட இரு நாள்கள்

நவீனக் கவிதைகளைப் புரிந்துகொள்வதில் பொதுவாகவே சிக்கல் உண்டு.  ஒரு சராசரி வாசகனுக்கு மட்டுமல்ல ஒரு நல்ல நவீனக் கவிஞனும் இதே  பிரச்னையைத்தான் எதிர்நோக்குகிறான்.  இது ஏனெனில் கவிதைகள் ஒருவரின் அக எழுச்சிலியிலிருந்து பிறக்கிறது. அவர் அதற்கு கொடுக்கும் வடிவம்  அவரின் உள்மனத்தில் தோன்றியவண்ணமே அமைகிறது-  ஒரு கச்சா பொருள் போல.அந்த அசல் வடிவத்தை தேடலின் வழி  வாசித்து இன்புறக்கூடிய வடிவத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதற்குக் கொஞ்சம் உழைப்பு தேவை. இந்தப் புரிதல் சிக்கலைக் கலைவதற்கான ஒரு களமாகத்தான் வல்லினம் தமிழில் மிக முக்கியமான பாடைப்பாளுமைகளில் ஒருவரான யுவன் சந்தரசேகரைக் கொண்டுவந்திருந்தது.  ஜூன் 11/12 முழுநாள்களும் அவருடனான உரையாடல் நிகழ்ச்சியாக இது நடந்து முடிந்திருக்கிறது. நிகழ்ச்சி நிறைவாகவும் பயனாகவும் இருந்தது. நிகழ்ச்சி தொய்வில்லாமல் நடந்ததற்குக் வல்லினம் இதனை  கட்டமைத்த விதம்தாம் காரணம். இதனைச் சற்றும் சோர்வில்லாமல் வழிநடத்திய யுவனின் யுக்தியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னது, நான் ஆசிரியரல்ல, நீங்கள் மாணவர்களும் அல்ல. நாம் இரு தரப்பனருமே