விசில் கூர்மையான விசில் சப்தம் மீண்டும் என் காதுகளை மோதியது. அதிர்ந்து விழிக்கச் செய்த ஒலி. காதி ஜவ்வை ஊசியில் குத்தப்பட்டது போல துடித்து எழுந்தேன். அண்டை வீட்டு படுக்கையறை வெளிச்சம் கண்ணாடி சன்னலையும் , திரையின் சிறிய திறப்பையும் தேடி ஊடுருவி உள்ளே நுழைந்திருந்தது. கண்கள் மீண்டும் மூடித், துயிலுக்குள் ஒன்றிணைவதென்பது சிரமமான காரியம். தூக்கத்தைக் கலைத்து, மூளையின் இயக்கத்தை முடுக்கிவிட்ட சப்தம், இமைகளை மூட வெகு நேரத்தை எடுத்துக்கொள்ளும். அண்டை வீட்டின் நிலை சரியாகும் வரை வெளியே காற்றாட நடக்கலாமா என்று மனம் அழைத்தது. பின்னிரவைத் தாண்டிய பொழுதில் காற்று சிலு சிலுவென வீசும். காற்றின் ஈரச் சில்லிடல் உவகையை உண்டு பண்ணும். நடந்துவிட்டு வந்து படுத்தால் தேவலாமெனத் தோணியது. இரவின் சல...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)