Skip to main content

Posts

Showing posts with the label ஐரோப்பிய அழகு கொஞ்சும் நதிகளும். முத்தம் 10

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 10

கூவமும் ஐரோப்பிய அழகிய நதிகளும். -முத்தம். 10 முன்னெப்போதையும் விட பார்சினோவில் பார்த்த கணேசப் பெருமான் இடம்பெற்ற உள்ளாடைப் பதிவை நிறைய பேர் வாசித்திருக்கிறார்கள். என்னடா உலகமிது? உள்ளாடையின் ஈர்ப்பின் ரகசியம் புரியவில்லை எனக்கு. அதற்காக பல்வேறு உள்ளாடை படங்களைப் பதிவு செய்துகொண்டு வந்திருக்கலாம் என்று தோணுகிறது. என்ன செய்வது நுகர்வோர் விருப்பம்தானே எதிலும் முன்னிற்கிறது. முத்தங்களால் ஆன தேசம் என்று எழுதியது   தப்பானதோ என்று எண்ண வைக்கிறது. எங்கே முத்தங்கள் என்று கேட்கிறார்கள். இத்தனைக்கும் ஏட்டில்தான் முத்தம் என்று எழுத முடியும். அதையேனும் போடுங்கள் என்று கேட்கிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொன்னது முத்தப் பதிவையும் சேர்த்துச் சொன்னாதா என்ன? என்ன செய்வது ? நான் நேரடியாகப் பார்த்த அனுபவத்தை அப்படியே உங்களுக்கு பதிவேற்றம் செய்ய முடியுமா தெரியவில்லை. படம் போடுகிறேன் பார்த்து அனுபவியுங்கள். ஆனால் இப்போதல்ல.முத்தக் காட்சி வரவேண்டும். வெட்டிக்கன் சிட்டியை விட்டு வெளியாகும்போது பசிக்கத் துவங்கியது. என் மகள் பிரியாணி கிடைக்குமா பார்க்கவேண்டும் என்றாள். இங்...