Skip to main content

Posts

Showing posts from January 17, 2010

கோபாலும் அவனைச்சுற்றிப் பின்னப்பட்டுள்ள வலைகளும்

கோ.புண்ணியவான் என் காரின் டெஷ்போர்ட் காபினெட்டின் பழைய குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துகொண்டிருந்த போதுதான் கோபாலின் நினைவு மீண்டும் வந்தது. இரண்டு அங்குல அகலமும் ஐந்து அங்குல நீளமும் கொண்டு, பின் செய்யப்பட்டு இணைக்கப்பட்ட வண்ண வண்ண தாளில் அவன் கைப்பட எழுதி என்னிடம் கொடுத்த பொன்மொழிகளைப் பார்த்தபோதுதான் கோபாலை நினவுகூரும் சந்தர்ப்பம் உண்டானது. அந்தத்தாட்கள் அவன் வேலைசெய்யும் இடத்தில் வெட்டி வீசப்பட்டதாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் அதனைப்பார்த்தபோதே தேவையில்லாமல் தோன்றி மறைந்தது. கோபாலைக் கடைசியாகச் சந்தித்து இரண்டாண்டுகளிருக்கும். அவனை அருதியாய் மறந்துவிட்டிருந்தேன். நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு அவன் பெரிய மனிதர் ஒன்றும் இல்லையென்றாலும் அவனைப்பற்றிச் பிறரிடம் சொல்வதற்குச் சுவாரஸ்சியமான சம்பவங்கள் நிறையவே இருந்தன. அவன் புத்தகங்களில் படித்த பொன்மொழிக¨ள் எழுதி அதற்கு விளக்கமும் எழுதியிருந்தான். முத்து முத்தான கையெழுத்தில் நீல மைகொண்டு எழுதி அதன் பொருளைச் சிவப்பு மையால் எழுதியிருந்தான். முதல் பார்வையில் திருக்குறள் எழுதப்பட்டிருக்கின்றன்னவோ என்றுதான் நினைக்கத்தோன்றும். எல்லாம் எனக்