Skip to main content

Posts

Showing posts from October 7, 2012

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

  வற்றாது ஒடும் நதி   கனத்த இதயத்தோடுதான் நான் பணி ஓய்வு பெறும் நாளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  இனி அத்துவான வெளியைப்பொல சலனமற்று விரிந்திருக்கும் வெறுமையான நாட்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்ற இனம் புரியாத அச்சம் மனதுக்குள் கசியத்துவங்கியிருந்தது. ஆனால் ஓய்வு பெற்ற ஓரிரு நாட்களிலேயே அந்த அச்சம் உச்சி வெயிலின் நிழலென சுருங்கிவிட்டிருந்தது! எனக்கு வாசிக்கும் பழக்கமும் எழுதும் பழக்கமும் என்னோடு கவச குண்டலமாய் ஒட்டிக்கொண்டிருந்ததால் பணி ஓய்வு பெற்ற வெறுமையான நாட்களை எளிதில் கடந்து செல்ல  முடிந்திருந்தது. கலை சார்ந்து இயங்காதவர்களின் வாழ்க்கையின் வெறுமையான நாட்களை எளிதில் கடந்துவிடும் உபாயம் பெற்றிருப்பார்களா என்பதில் என் மனதில் தீராத சந்தேகம் வடிந்தபடி இருக்கிறது. என் நீண்ட கால ஆசிரியர் பணியை செம்மையாகச் செய்ததுண்டா என்ற வினா  மின்சார, தண்ணீர், தொலைபேசி கட்டண பில் போல  என்னை விடாமல் பின் தொடர்ந்தவண்ணம் உள்ளது. பள்ளியில் நான் போட்ட திட்டங்கள் பல நிறைவேறியும், சில வற்றில் தோல்வியும், முழுமூச்சாய் ஈடுபடாததால் சிலவற்றில் நிறைவின்மையும் உண்டானதுண்டு. தலைமை ஆசிரியப் பணியின்போது உண்டான பி