Skip to main content

Posts

Showing posts from October 6, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

(ஏர் ஆசியா பற்றி ஒரு கொசுறு செய்தி. சிக்கனச் சேவை என்ற பெயரில் பயணிகள் பணத்தின் மேல் குறி வைக்கும் உத்தி பற்றிய செய்தி இது. நான் அனுபவித்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது) 4.ஏற்காடு மலைக்குளிரும் இலக்கியச் சாரலும்.                                                         ஏற்காடு விடுதி இந்தப்பயணம் மிகக் கடுமையான பயணமாக இருக்கும் என்று முன்னரே தெரிந்திருந்தால் பயணத்தை ரத்து செய்திருப்பேன். கடந்த ஆண்டு கலந்துகொண்ட ஊட்டி இலக்கியச் சந்திப்பின் இனிமையான நினைவுகள் ஆறுவதற்கு முன் இந்த ஆண்டு இன்னுமொரு இலக்கிய முகாமுக்கு ஏற்காடு பயணப்பபட்டோம். இலக்கியம் எங்களுடைய ஆன்மாவில் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்று. அதிலும் ஜெயமோகன் குழுமத்தின் ஏற்பாடு. சொட்டச் சொட்ட இலக்கியம் மட்டுமே பேசி, விவாதித்து, சண்டையிடும் ஒரு கொண்டாட்ட நிகழ்வு என்பதால் அதன் ஈர்ப்பிலிருந்து விடுபட முடியாது. அங்கே பிரமுகர், மாலை மரியாதை, போலிப் பாராட்டு, பரஸ்பர முதுகு சொரிதல் மேடை, நாற்காலி ஒன்று கிடையாது. தரையில் விரித்த பாயில் உட்கார்ந்துதான் இலக்கிய விமர்சனக்கள் விவாதங்கள் நடக்கும்.                             ஜெ

காசிக்குப்போவது பாவம் தீர்க்கவா?

3. ரயில் பயணம்                                                   சுற்றுப் பயண வழிகாட்டி சரத் ஏர் ஆசியா போன்ற கருமித்தனமிக்க சேவைகள் போலல்லாமல் மாஸ் விமானம் தாராளமான வசதிகள், சேவைகள் செய்து தருகிறது. நல்ல அகலமான இருக்கைகள், கால் நீட்டி சாய்ந்துகொள்ள போதுமான இடம், அமர்ந்துவுடன் நம் இருக்கைக்கு முன்னால் அமைக்கப்பட்ட தொலைக்காட்சி, அதில் விரும்பித் தேர்வு செய்துகொள்ள நிகழ்ச்சிகள் என உல்லாச பயணத்துக்கான முகமன் செய்து தருகிறது. அமர்ந்த சற்று நேரத்தில்  பொறித்த நிலக்கடலையும், ஆரஞ்சு ஆப்பில் ஜூஸ் கொடுக்கிறார்கள். சற்றுநேரத்தில் தேநீர் காப்பி வருகிறது. பியர், விஸ்கி, வைனும் பரிமாறுகிறார்கள். பின்னர் இரவு உணவு, பிரியாணி, தேங்காய்ச் சோறு கொடுக்கிறார்கள். பியர் விஸ்கி மீண்டும் கேட்டால் கிடைக்கிறது. கட்டணமில்லை. இந்தியர்களுக்கு இந்தச் சேவை எவ்வளவு குதூகலத்தை அளிக்கும் என்று எண்ணிப்பாருங்கள். கூச்சப் படாமல் மீண்டும் பீரும் விஸ்கியும் கேட்டுப் பெறுகிறார்கள். ஆனால் ஏர் ஆசியா விமானத்தில் இவற்றையெல்லாம் பணம் கொடுத்தால்தான் கிடைக்கும். நம்முடைய பயணப்பைகள் 15 கிலோ சுமைக்கு மேல் அனுப்பின

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

2. காத்திருப்பு மாலை ஆறரை மணிக்குத்தான் எங்களின் விமானப் பயணம் தொடங்கும். நானும் மனைவியும் (என் மனைவியும்) காலை 11.30க்கெல்லாம் கே.எல்.ஐ.ஏ விமானத்தளத்தில் வந்து இறங்விட்டோம். விமானம் ஏறும் வரை என்ன செய்வதென்று தெரியவில்லை. என்    இளைய   மகன் முதல்நாளே கே,எல்லில் ஒரு திருமண நிகழ்வுக்கு வந்துவிட்டிருந்தான்.  வந்த உடனே கூப்பிடுங்கள் , கே எல் பிரிக்பில்ஸில் பகலுணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் விமானத் தளத்தில் விட்டுவிடுகிறேன் என்றான். அந்தத் திட்டம் சரியாக வராது. அவன் இருக்கும் இடத்திலிருந்து விமான நிலையத்துக்கு ஒன்றரை நேரப் பயணம். பயணத்துக்கே நேரம் ஓடிவிடும். அதனால் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். அங்கேயே பகலுணவு உண்டோம். இரண்டாம் தளத்தில் கொஞ்சம் மலிவாகத்தான் உணவு கிடைக்கிறது. ஆனால் பசிக்குச் சாப்பிடலாம். எனவே பசித்தவுடன் சாப்பிடுவதுதான் உணவைச் சுவையாக்கும் சமரச உத்தி. அன்றைக்கு விமானத் தளத்தைக் கவனத்துடன் பார்வையிட்டேன். நான் ஓரிரு முறை வந்தபோது அதன் கட்டமைப்பு குழப்பமானதாகவே பட்டது. கொஞ்சம் நிதானித்துச் சுற்றிப் பார்த்தபோது குழப்பமெல்லாம் நாமே தகவமைத்துக்கொண்டது என்றே

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா? (பயணக் கட்டுரை)

                        காசிக்குப் போவது பாவம் தீர்க்க?                                                                              கங்கை நதி 'மீண்டும் வட இந்தியப் பயணம் போரடிக்கும்' என்றேன் என் மனைவியிடம். 'வாரனாசி(காசி), ரிசிகேஸ், ஹரிதுவார் போன்ற புனித ஸ்தலங்களைப் இன்னும் பார்க்கவில்லையே,' என்றாள் இல்லாள். 'அங்கேயும் ஹிந்தி பேசியே கொல்வார்கள், வார் மாதிரி இழுத்துத் தின்னும் நான் போடுவார்கள் , நீராவி கொண்டு அவித்த சோறு,  சோனா பப்டி, குலாப் ஜமூன் போன்ற அதி இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டு இனிப்பு நீரை கொதிநிலைக்குக் கொண்டு வரவேண்டுமா?' என்று எதிர்வாதம் செய்தேன். 'வீட்ல மட்டுமென்ன கட்டுப்பாடாவா இருக்கோம். வர்ரது வரத்தான் செய்யும். போய்ட்டு வரலாமே, வாங்க' என்றாள். செலவை கணக்குப் போட்டுப் பார்த்தேன், இரண்டு வாரங்களுக்கு மலேசிய ரிங்கிட் பன்னிரண்டாயிரம் வநதது. சேத்து வச்சி என்னத்தப் பண்ணப்போறீங்க? என்றாள். இதேத்தான் வேலையா போச்சு .இப்பத்தான் ஒரு வாரத்துக்கு முன்னால பாலி போய்ட்டு வந்தோமே. 'க