Skip to main content

Posts

Showing posts from 2012

மலாய்க்காரர்கள் எந்தப் பக்கம்?

                                                   அன்வர் இப்ராஹிம் PKR கட்சி                                                                               மஹாதிர் முகம்மது முன்னால் பிரதமர். நிக் அசிஸ் PAS கட்சி                இங்கே நான் மலாய்க் காரர்கள் என்று சொல்வது பெரும்பாலான மலாய்க்காரர்கள் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.             மலேசியாவில் மாலாய்க் காரர்கள் தங்கத் தட்டில் வைத்து பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கான சலுகைகளை பிற இனத்தவர் வாயில் எச்சில் ஊற பார்த்துக்கொண்டிருக்கும் வகையிலான் கல்வி, சமூக, பொருளாதார் மேம்பாட்டுச் சலுகைகள்! பல இன மக்கள்  வாழும் நாட்டில் இதனை ஒளிவுமறைவில்லாமலேயே அரசு செய்து வருகிறது என்றால் அதன் பலம் குறித்துச் சொல்ல வேண்டிய வசியமில்லை!. இதனால்தான் இவ்வரசு தன்னைத் 'transparent' என்று பிரகடனப் படுத்திக் கொள்கிறதோ என்னவோ!! அதனைச் சட்டப் படியும் செய்து வருகிறது. மலாய்க்காரர்கள் (அதாவ்து பூமியின் புத்திரர்கள்)  என்ற பிரத்தியேக சலுகை பெற்ற குடிமக்கள் என்ற ரீதியில் மலேசியாவில் கிட்டதட்ட அறுபத்தைந்து விகிதம் மலாய்க்காரர்களே வ

மலேசிய சீனச் சமூகம் யாருக்கு வாக்களிக்கும்?

                            ( பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்)                (லிம் குவான் எங்கின் தந்தை லிம் கிட் சியாங். DAP கட்சியின் முக்கிய  தலைவர்களில் ஒருவர்)        மலேசியாவில் எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப் படலாம். ஐந்து ஆண்டுக்கால ஆட்சி காலக்கட்டம் நிறைவுறும் தருணம் நெருங்கிவிட்டது. நாடாளுமன்றம் கலைக்கப் பட்டு தேர்தல் அறிவிப்புக்கு மக்கள் ஆர்வத்தோடு காத்துக்கிடக்கிறார்கள்.   தேசிய முன்னணி ஆளுங்கட்சியே அந்த அறிவிப்பைச் செய்யும். அதிலும் பிரதமரிடம்தான் அந்த ‘வெட்டோ’ அதிகாரம் உள்ளது. அவர் சரியான தருணத்துக்கு காத்திருக்கிறார் அல்லது சரியான தருணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.        கடந்துவிட்ட ஐம்பது ஆண்டுகளைப் போலல்லாமல் இம்முறை கடும் போட்டியை எதிர்கொண்டு நிற்கிறது தேசிய முன்னணி. இது சோதனை மிகுந்த காலக் கட்டம் அதற்கு. நாடு பிரிட்டிசாரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட நாள் தொடங்கி இன்றைய தேதிவரை அக்கட்சியே ஆட்சியைப் பிடித்து அசைக்க முடியாத அரசாங்கமாக தன்னை நிறுவிக்கொண்டு வந்தது இந்த ஐம்பது ஆண்டு காலமாக. அது ஒரு சாதனைதான். ஆனாலும் அது ஒர

இந்தியர்களின் வாக்கு வேட்டைக்காக நஜீப்பின் அரசியல் வியூகம்

                                                 Najib                                        Anwar                இன்றைய மலேசியப் பிரதமர் நஜிப் முந்தைய பிரதமர்களைவிட சற்று வித்தியாசமானவர். எந்த நேரத்திலும் நாடு எதிர் நோக்கியிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற அவர் எதிர் நோக்கியிருக்கும் சவால்கள் முந்தைய எந்தப் பிரதமரும் சந்தித்திராதது. 2008க்குமுன்னர் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தை எளிதில் கைப் பற்றி ஆட்சி பீடத்தில் தன்னை அமர்த்திக் கொண்டது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறு வடிவம் கொண்டு அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது.                       முந்தைய காலங்களைவிட தற்சமயம் எதிர் கட்சிகள் குரல் ஓங்கியிருப்பதே காரணம். எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தேர்தலில் ஜெயிப்பதற்கான அரசியல் வியூகமும் முன்னகர்வும் பிரதமரை மிகுந்த கவலைக் குள்ளாக்கியிருக்கிறது. அதனாலேயே அவர் தன் அரசாங்கத்தின் மரபான இனவாத அரசியல் பாணியைக் கைவிட்டு ‘எல்லாருக்கும் எல்லாமும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தன்னை தகவமைத்துக்கொண்டு கவனமாகக் காயை நகர்த்தியபடி இருக்கிறார். 2008ல் நடந்து முடிந்த தேர்தலுக

இந்த முறை இந்தியர்களின் ஓட்டு யாருக்கு?

                     இரண்டு வாரங்களுக்கு முன்னால் முன்னால் தமிழாசிரியர்கள் மாநாடு நடந்தது. நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த துணையமைச்சர் வரவில்லை.ம.இ. கா காரர்.  அவருடைய பிரதிநிதியாக  பினாங்கின் முக்கியமான தலைவராக இருக்கும் கிருஷ்ணன் வந்திருந்தார்.            அவரை உரையாற்ற அழைத்தார்கள்.  நாடு தேர்தல் காய்ச்சல கண்டிருந்த சமயத்தில் அரசியல் வாதிகள் கிடைக்கும் மேடை வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தெரிந்த விஷயம்தானே.            அவரும் அதற்கு விதிவிலக்கல்ல.             இன்றைக்கு பிரதமர் இந்தியர்களுக்கு கேட்டதெல்லாம் கொடுக்கிறார். முன்பு போலல்ல. 2008ல் நடந்த ஹிண்ட்ரப் புரட்சி நல்ல பலன்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அது போன்ற புரட்சி நடந்திராவிட்டால் இந்தியர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே தொடர்ந்து நடத்தப் பட்டிருக்கும் என்று சொல்லிக்கொண்டே போனார். ( மலேசியா ஒரு இனவாத நாடு. இனப் பாகுபாட்டைச் சட்டப் பூர்வமாகவே அமலாக்கம் செய்யும் சாதூர்யத்தை இங்கே காணலாம்.கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாலாய்க்காரர்களுக்கான் சிறப்பு சலுகைகளைக் கேள்வி முறையின்றியே செய்து வந்தார்கள். இன்னமும் தொ

அன்னை என்ற தீபம் அணையாது எரிகிறது

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும். அம்மா என்ற தலைப்பில் கவிதை கேட்டார்கள் ‘அம்மா’ என்றேன் உடனே, கேட்டது அம்மாவாக இருந்தால் இன்னும் சின்னதாய் சொல்வேன் ‘நீ’.....என்று                     ...தாஜ்       இந்தக்கவிதை ஆனந்தவிகடன் இதழில் 2002 ஆம் ஆண்டு நடத்திய கவிதைப்போட்டியில் எழுபத்தைந்து சிறந்த கவிதைகளில் ஒன்றாக பதிவாகியது. கடுகளவே இருக்கும் இந்தக் கவிதை மனதுக்குள் பூமழை பொழிவதை உணரமுடிகிறது.  வெப்பம் உரசியதும் நெகிழ்ந்துருகும் நெய்யைப்போல அம்மா என்ற சொல்லுக்குள் அன்பும் பாசமும் பிரவாகமாவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெறும் சொல்தானே என்று புறந்தள்ள முடிவதில்லை, அதற்குள் உறைந்திருக்கும் உணர்வும் உயிர்த்துடிப்புள்ளவை!. எல்லாச் சொற்களுக்கும் தாய்ச்சொல்லாக தன்னை நிறுவிக்கொள்கிறது அம்மா என்ற அற்புதச் சொல். உயிரெ¦ழுத்தும், மெய்யெழுத்தும் உயிர்மெய்யை உருவாக்குவதுபோல அம்மா என்ற ஒற்றைச் சொல்லுக்குள் உயிரும்    மெய்யும் இரண்டரக் கலந்து நிற்கிறது.        ஒருமுறை என் நண்பன் ஒருவன் என்னைத் தன்னோடு ஓரிடத்துக்கு வரும்படி அழைத்திருந்தான். எங்கே என்றெல்லாம் நண்பனிடம் கேட்கத்தோணவில்லை. என் வீட்டுக்கு வ

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

  வற்றாது ஒடும் நதி   கனத்த இதயத்தோடுதான் நான் பணி ஓய்வு பெறும் நாளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  இனி அத்துவான வெளியைப்பொல சலனமற்று விரிந்திருக்கும் வெறுமையான நாட்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்ற இனம் புரியாத அச்சம் மனதுக்குள் கசியத்துவங்கியிருந்தது. ஆனால் ஓய்வு பெற்ற ஓரிரு நாட்களிலேயே அந்த அச்சம் உச்சி வெயிலின் நிழலென சுருங்கிவிட்டிருந்தது! எனக்கு வாசிக்கும் பழக்கமும் எழுதும் பழக்கமும் என்னோடு கவச குண்டலமாய் ஒட்டிக்கொண்டிருந்ததால் பணி ஓய்வு பெற்ற வெறுமையான நாட்களை எளிதில் கடந்து செல்ல  முடிந்திருந்தது. கலை சார்ந்து இயங்காதவர்களின் வாழ்க்கையின் வெறுமையான நாட்களை எளிதில் கடந்துவிடும் உபாயம் பெற்றிருப்பார்களா என்பதில் என் மனதில் தீராத சந்தேகம் வடிந்தபடி இருக்கிறது. என் நீண்ட கால ஆசிரியர் பணியை செம்மையாகச் செய்ததுண்டா என்ற வினா  மின்சார, தண்ணீர், தொலைபேசி கட்டண பில் போல  என்னை விடாமல் பின் தொடர்ந்தவண்ணம் உள்ளது. பள்ளியில் நான் போட்ட திட்டங்கள் பல நிறைவேறியும், சில வற்றில் தோல்வியும், முழுமூச்சாய் ஈடுபடாததால் சிலவற்றில் நிறைவின்மையும் உண்டானதுண்டு. தலைமை ஆசிரியப் பணியின்போது உண்டான பி

எப்போது தருவாய் வரம்?

எப்போது வரம் தருவாய்? வெளியே இருந்துகொண்டு ஒரு அழகிய வீட்டைப் பார்ப்பது போலவே உன்னைக் பார்க்கத் துவங்கினேன் அப்போது அந்நியம்தான் அந்த வீட்டுக்கும் எனக்குமான தொடர்பு என்பது என் கண்களுக்கும் வசீகர வீட்டுக்குமான இடைவெளி மட்டுமே நாம்  நட்பாகிப் போன  தொடக்க நாட்களில் ஒரு இடைவெளி எப்போதுமே நம் உள்முகத்தை ஒளித்து விளையாடியது வார்த்தைகளுக்கு ஒப்பனை செய்து களைத்த போதெல்லாம் எதுதான் நிஜமென மௌனமாய் அழுதோம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ஏதேதோ பேசுகிறோம் காதலை தணிக்கை செய்துவிட்டு தணிக்கை செய்ததுவும் காதல்தானே என்று தெரியாமல் நாம் பேசிக்கொண்டிருக்கும்போது தொடர்பற்றிருந்தோம் பேசாதபோதுதான் தொடர்பில் இருந்தோம் நம் காதலை மென்றபடி வானத்தில் திடீரெனெ நட்சத்திரமொன்று இருளைக் கிழித்தது போல உன் ஒளி என்னை இருளாக்கியது வெளிச்சத்துக்காக நான் வேண்டி நின்ற போது இடைவெளி குறைத்து என்னுள் மின்னல் ஒன்றைச் பாய்ச்சினாய் நட்சத்திர ஒளியால் திணறடிக்கப்பட்டு  மீளாத போது மின்னலாய்த் தாக்கி என்னை ஊனமாக்கி விட்டிருக்கிறாய் நான் மீண்டும் பழைய நானாக வேண்டும் இந்த நக்கீரனை எரித்த சிவனே என்னைச்
நிராகரித்தலும், நிராகரிக்கப் படுதலும்- பிச்சைப் பாத்திரம் கதை ஒரு பார்வை                                பாவையின் ‘பிச்சைப் பாத்திரம் சிறுகதை மலேசியாவில் அரிதாக சொல்லப்படும் கதை வகைமையில் ஒன்று. ஏறத்தாழ துறவறமே இல்லறத்தைவிட மேலானது என்று சொல்ல வந்த கதை. கிட்டதட்ட 100 விகிதம் நடைமுறை   வாழ்க்கையையைத் திரும்பத் திருமப படம்பிடித்துக்காட்டும் வரட்சியான கதைக் களத்திலிருந்து சற்று விலகி துறவு பற்றிப்பேச வந்ததை சற்று ஆறுதல் தருகிறது. அதற்காகப் பாராட்டுகள்.        ஏகபோக சொத்துக்கும் அதிபதியாகப் போகிறவனின் மகன்   துறவறத்தில்தான் தான் முழுமையடைவதாகச் சொல்வதை நிதானமாக , சொற்ப வார்த்தைகளுக்குள் சொல்வது வாசகமனத்தை கவர்கிறது. ஆனால் மகன் துறவறம் மேற்கொள்வதற்கான பின்புலக் கற்பிதம் எங்கேயும் காட்டப் படவில்லை. வாசகனே இட்டு நிரப்பிக்கொள்ளட்டும் என்று வெற்றுக்கோடுகளை விட்டிருக்கலாம் கதாசிரியர் .ஆனாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லியே இருக்கவேண்டும் .இட்டு நிரப்புவதற்கான வெற்றுக்கோடுகள் கதையில் காணவில்லை. மகன் மெய்ஞ்ஞானத் தேடலுக்குள் நுழைந்து விட்ட பின்புலம் இன்னொரு கதையாக நீண்டுவிடுமோ என்று நினை

ஓடாதே -கதை விமர்சனம்

22.7.12ல் ஞாயிறு தினக்கதிரில் பிரசுரமான ஓடாதே கதையைப் பற்றி என் பார்வை  ஓடாதே கதையை ஒரு கட்டாயத்தின் பேரில், ஒரு ஆர்வமற்ற மனநிலையோடுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் கதையைத் தொடங்குவதற்கு முன்னாலேயே பொதுவாகவே புதியவர்களின் படைப்பை வாசிக்கும்போது  தோன்றும் முன்சலிப்பு, கதையைத் தொடங்கியதும் பட்டென விலகிக்கொண்டது. தொடங்கியபோது உண்டான ஆர்வநிலை முடியும் வரை அகலவே இல்லை என்பதிலிருந்தே இக்கதை மிக அருகில் வந்தமர்ந்து என்னோடு கைகோர்த்துக்கொண்டு கடைசிவரை பயணித்தது.  நேர்க்கோட்டு உத்தியையச் சார்ந்து கதையைப் பின்னியிருக்கிறார் ஐஸ்வரி. Linear என்று சொல்லக்கூடிய நேர்க்கோட்டு உத்தி மிகப் பழைய கதைசொல்லும் பாணி. ஆனாலும் இக்கதைக்கு (கருவுக்கு) இவ்வுத்தியின் செய்நேர்த்தி  மிகப் பொருத்தமாவே அமைந்துருந்தது. மொழி நடையின் அழகியல் இதற்குக் கூடுதல் சான்று.    ருக்குமணி டீச்சரில் தொடங்கி அவரிடமே ஒரு அதிரடி முடிவோடு வந்து நிற்கிறது கதை.    பொதுவாகப் பள்ளிகளில் ருக்குமணிச் டீச்சர்களின் சாகசங்களால் சமூகத்தில்  சாதனையாளர்களாக வரவேண்டியவர்களை எண்ணற்றவர்களை மிகச் சாதூர்யமாக ,அதிலும் மிக துச்சமாக தெருவில் எரிந்ததுவிட

பேயச்சம்

கழுத்தைக்கடித்து குருதியுறுஞ்சும் பேயாகவே மாரியம்மன் கோயிலேறும் சடக்கில் தலைகோதி நின்ற புளிய மரம் அச்சுறுத்திய காலம் ஒன்றுண்டு அம்மாதான் சொல்வாள் ரத்தக் காட்டேறி மரமென்று  பழம் பறிக்க பள்ளி முடிந்து கழியெறியும் போதெல்லாம் அதன் குச்சியொடித்து விலாசும்போதே தோலுறித்த ரத்தத் தடையங்கள் உறுதிப் படுத்தியது உண்மைதானென்று வெயில் விரட்டும் அதன் குளிர் நிழலில் வியர்வை நனைய விளையாடும் போதில் பேய் நினைவு மெல்ல ஒதுங்கத் தொடங்கியது நோய் நொடி விரட்டும் அதன் இலை மருத்தவம் பார்த்துப் பழகி நன்பகல் நிழலாய் கறையத்தொடங்கியது கொஞ்சம் மாநுட நலம் காக்கும் கரிசனை நோக்கம் மரத்தை நேசிக்க நேர்ந்தது கருவாட்டுக் குழம்புக்கும் ஆத்துமீன் கறிக்கும் புளிப்பு  சுவை கூட்டியபோதும் பயம் பறந்தோடி பாசம் மருவியது காய்ந்து சுல்லிகள் நின்றெரியும் தீயில் தோளில் ஒட்டா புளியம் பழமாய் அச்சம் ஒட்டாது ஓடியது கிளையேறி ஒளிந்து விளையாடும் விறுவிறுப்பில் கிலி அருதியாய்  அழிந்தொழிந்தது கல்லெறிந்து கல்லெறிந்தே காட்டேரியை விரட்டி அடித்தோமோ என்னவோ கித்தா மரங்கள் இலையுதிரில் எலும்
             (எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு இக்கவிதையைக் சமர்ப்பிக்கிறேன். )   -63 எனக்கின்று -63 நீங்கள் வாழ்த்துக்கூறி என்னை மீட்டுருவாக்கியதால் என்னைச்சுற்றி ஆனந்த ஒளிவட்டம் என்னாளும் மிதந்திருப்பதால் என் வெற்றி இன்னதென்று என் பிரிய எதிரிகள் இனங்காட்டுவதால் என்னைச் சூழ்ந்த காற்று தீபத்தை வேண்டுமானால் தீர்த்துக் கட்டலாம் தீயை அல்லவே... என்பதால் என் நரை என் வரையறை இதுவென்று வழி சொல்வதால் அது என்னை மென்மேலும் வெள்ளையாக்குவதால் என் முதுமை என் இளமையிலிருந்தே பிறந்ததால் என் அனுபவம் கடவுளாகி என்னைக் கைப்பிடித்து இட்டுச்செல்வதால் தட்டுகின்ற கதவுகள் இன்றில்லையென்றாலும் என்றாவது திறந்தே தீரும் என்பதால் கர்ணன் தொடையைத் துளைத்த கவலை வண்டு என் கவனத்துக்கு அப்பால் இருப்பதால் இந்தக் கவிதைக்கான கரு இன்று என்னிலிருந்து வித்தானதால் மரணம் மறுபிறப்புக்கான வாசலைத் திறந்துவிட்டதால் இன்று எனக்கு மைனஸ் 63 தானே?.
                              அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்                                 உள்ளொளி நிறைந்த உலகம்               நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்த நாட்கள்  எங்களுக்கென ஒரு சொந்த வீடு வாங்கிவிடவேண்டுமென்ற உந்துதலை உண்டாக்கிக்கொண்டிருந்தது. வாடகை வீடுகள் நம்மை ஏற்றுக்கொள்வதில்லை. இது யாருக்கோ கட்டிய வீடு இதில் உனக்கு இடமில்லை என்று குடியிருப்பனை எச்சரித்தபடி இருக்கும். என்னதான் மாதாமாதம் வாடகைப்பணத்தைக் கட்டிமுடித்தாலும், வீட்டு உரிமையாளன் நமக்குத் எந்த விதத் தொந்தரவும் தராவிட்டாலும், நம்முடைய இருப்பை அது தற்காலிகமாகவேதான் கருதுகிறது. ‘வீடு உன்னுடையதல்ல’ என்ற உரிமைப்போராட்டத்தை வீடு மௌனமாகவே அரங்கேற்றிய் வண்ணம் இருக்கிறது போலும். ஆகவே தான், வாடகை இருப்பவனின் கனவு சொந்த வீடொன்றில் நிறுவுவதிலேயே கசிந்து நிலைகொள்கிறது.     நான் வீடொன்றை கட்டிக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தபோது, “வீடு கட்ட நிலம் இருக்கு வேணுமா?” என்ற நண்பர் ஒருவர் கேட்டார். நிலத்தை வாங்கிக் கொள்ளும் அளவுக்கு பணம் போதாது என்றே உள்மனம் கருதினாலும் ,” என்ன விலைக்கு வருகிறது” என்ற ஆசையை வெள

தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளியில் சிறுகதைப் பயிலரங்கு

 துணை முதல்வர் திரு கோவிந்தசாமி  ஆசிரியர் முனிச்செல்வியுடன் நான் என் எழுத்துச் சகோதரி முனிச்செல்வி  ஏற்கனவே தான் போதித்த பள்ளிகளில் சிறுகதைப் பயிலரங்கு நடத்த என்னை அழைத்திருக்கிறார். அது ஒரு அலாதியான அனுபவம். தானும் ஒரு எழுத்தாளர் என்பதால் அவரிடம் படைப்பிலக்கியம் பற்றிய வற்றாத பற்று  ஊறிக்கொண்டே இருக்கிறது . இம்முறையும் மாணவர் பயனுற என்னை தற்போது அவர் பணியாற்றும் தாமான் பெர்வீரா இடைநிலைப் பள்ளியில் ஒரு பயிலரங்கை நடத்தச் சொல்லி கேட்டுக்கொண்டதிலிருந்து இலக்கியம் சார்ந்த அவரின் ஈர்ப்பு நன்கு புலனாகிறது.( ஏன் அவரையே அழைக்கிறீர்கள் ,எனக்கு ஒரு  வாய்ப்பு தரலாமல்லவா என்று யாராவது உங்களைக் கேட்டும் வரலாம் செல்வி) ஒரு மூன்றாண்டு காலம் தன்னுடைய முதுகலைப் படிப்பை வெற்றிகரமாய் முடித்துவிட்டு இந்தப் புதிய பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கிறார் அவர்.எங்கே போனாலும் மாணவர்களோடு அன்பான தொடர்பு வைத்திருப்பவர் இவர். அவர்களுக்கும் படைப்பிலக்கிய ஆற்றல் வளரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். கடந்த வெள்ளிக்கிழமை 17.2.2012 ல் சரியாக 12.50 க்குப் பள்ளியை அடைந்ததும் என்னை வரவேற்றவர் அப்பள்ளியின