Skip to main content

Posts

Showing posts from May 19, 2019

சிறகுகள் -சிறுகதை

                                                          சிறகுகள்                                             கோ.புண்ணியவான்                                 அது ஒரு துர்ச் சம்பவம்.   தப்பிக்கவே முடியாத ஒரு மாயவலைக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது போல முடிந்துவிட்டிருந்தது . எல்லாம் கொண்டாட்ட கதியில்   நகர்ந்து கொண்டிருந்த தருணத்தில்   ஓர்   ஊழிப் பெரும் கொடுக்குப் பிடியில் இறுக்கப்பட்டு விடுவோமென்று மதி எதிர்பார்க்கவில்லை.                  தேனிலவின் மூன்றாவது நாளில் நீர்வீழ்ச்சியில் குளிக்கப் போனபோது ஒரு மூன்று நான்கடி உயரத்திலிருந்து குதூலத்தோடு பாய்ந்தவர் குப்புற விழுந்து நீரிலிருந்து சில நிமிடங்கள் எழாதிருக்க , பதறி ஓடிப்போய் தூக்கும் போதுதான் தெரிந்தது ரமேஷ் நினைவற்றும் , மூச்சுப் பேச்சற்றும் , கைகால் அசைவற்றும் அப்படியே பாறைபோல   சில நிமிடங்கள் அமிழ்ந்து கிடந்தது.   மூச்சு நீரை உள்ளிழுத்ததோடு அந்த நினைவிழப்பு நிகழ்ந்துவிட்டிருந்தது. முதுகுப்புறம் சுவாமிழந்த அசைவின்மையை உணர , உடனடியாக கூடியிருந்தோர் உதவியை நாடி மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து சேர்த்து மூன்று மணி நேரப்