( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)   கோ.புண்ணியவான்     நேற்றைய தொடர்ச்சி........     மனிதர்கள் அணிந்து திரியும் எண்ணற்ற முகமூடிகளும்     இந்த உலகம் ஒரு நாடகமேடை,நாமெல்லாம் அதன் நடிகர்கள் என்கிறார் அறிஞர் ஷேக்ஸ்பியர்.என்ன தீர்க்க தரிசன நடப்பியல் உண்மை.நம்முடைய குணத்தை, உற்று கவனித்தால் நாம் எத்தனை பெரிய நடிகர்கள் என்று புரியும்.நாம் எப்போது அசலான நாமாகிறோம், என்று மனசாட்சியை கேட்டுப்பார்த்தால் அநேகமாக பதில் கிடைக்காது.மனசாட்சியும் குழம்பிய நிலைக்கு உள்ளாகும்.எல்லாரும் கண்ணுக்குப்புலப்படாத ஆயிரக்கணக்கான முகமூடிகளை வைத்துக்கொண்டு சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி மாற்றி மாற்றி அணிந்துகொண்டு திரிகிறோம். சுயநலமிகளின் உலகமல்லவா இது! வேறெப்படி இருக்கும்?     வேலைக்குச்செல்லும்போது   நண்பர்களைச்சந்திக்கும்போதும்   உறவினர்களைத்   திடீரெனச்சந்திக்க நேர்ந்தால்   வடிவமைத்துக்கொள்கிறோம்   பல முகமூடிகளை (பா.அ.சிவம் - மௌனம்)     வழிப்போக்கனின் முகத்தைப்   பொருத்திக்கொண்டு   வீதி வழி போகையில்   வியர்த்தலுக்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)