Skip to main content

Posts

Showing posts from January 12, 2020

பயணக் கட்டுரை 16 : இருபதும் எழுபதும்

15. கொய்த்தியாவ் காரை நிறுத்த கடற்கரையருகே இடமில்லை. ஓட்டுனர் எங்களை கடற்கரையில் இறக்கிவிட்டு எல்லாம் முடிந்தவுடன் அழையுங்கள் வருகிறேன் என்று சொன்னார்.தமிழகத்தில் கார் வைத்திருப்பவர் அனைவரும் காரோட்டுவதில்லை. குறிப்பாக தாங்கள் வசிக்கும் ஊரிலிருந்து வேற்றிடத்துக்குப் போவதாய் இருந்தால் ஓர் ஓட்டுனரை நியமித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நாள் சம்பளம் வழங்குகிறார்கள். நாங்கள் தங்கிய இரு குடும்பத்தாருக்கும் கார் ஓட்டுனர் வந்தார். ஏன் நீங்கள் ஓட்டுவதில்லையா என்று பத்ரியைக் கேட்டேன். நோட் சேவ் என்றார். இந்தியா முழுவதும் இதே நிலைதான்.சாலை அவ்வளவு பாதுகாப்பானதல்ல. சில காலங்களுக்கு முன்னால் சென்னையில் சமிக்ஞை விளக்கின் விதிகளைக்கூடப் பின்பற்றாத ஓட்டுனர்களைப் பார்த்திருக்கிறேன். "டேய் சாவ் கிராக்கி, வூட்ல சொல்ட்டு வந்ட்டியா?" போன்ற வசவுகளை நானே காதுபடக் கேட்டிருக்கிறேன்.பட்டணங்களில் மக்கள் திரள் அதிகம். சாலையில் ஓயாத கால்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. நமக்கும் அவசர உலகில் சிக்கிக்கொண்டது போன்ற உணர்வு. எனவே, அனுபவமுள்ள கார் ஓட்டுனர்கள் மட்டுமே இந்திய சாலைகளின் நாடித்துடிப்பை அறி

பயணக் கட்டுரை 15 : இருபதும் எழுபதும்

15. பாதாளக் கிணறு. காஞ்சிபரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்  தொன்ம நூல்களில் திருக்கச்சியேகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இதுவும் ஒரு பாடல்பெற்ற தலம்தான்.திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் இத்திருத்தலத்தைப்பற்றி தேவாரப் பாடல்கள் பாடியுள்ளனர். பௌத்த சமயமும்,சமண மதமும் கோலோச்சிய காலத்தில் சைவத்தை மீண்டும் நிறுவ, கோயில் கோயிலாகச் சென்று  பிரச்சாரம் செய்வதன்மூலம் இவர்கள் சைவ சமயத்தைச் செழிக்கச்செய்தனர். திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும், சுந்தரரும் வந்தடைந்த திருத்தலங்களில் ஒன்று ஏகாம்பரேஸ்வரர் ஆலயமாகும். இங்கு மூலவ மூர்த்தியாக இருப்பவர் சிவபெருமானும் காமாட்சியம்மனும் ஆவர். தேவாரத் திருப்பதிகங்கள் பாடிய இம்மூன்று சைவப் பெருமகனாரும் இக்கோயிலில் தேவாரம் இயற்றிப் பாடியமையால் இதுவும் பக்தர்கள் கூடும் திருத்தலங்களில் ஒன்றாக புகழுடன் விளங்கிவருகிறது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலில் மகத்தான சிற்பங்களை இங்கே காணமுடியும்.  இது இரண்டாம் நரசிம்மப் பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது என்று விக்கி சொல்கிறது. இங்கே மேலுமொரு சிறப்பு விஜயநகர மன்னர் காலத

பயணக் கட்டுரை 14 : இருபதும் எழுபதும்

14. சைவமும் வைணவமும் சங்கமிக்கும் காஞ்சிபுரம். காஞ்சி காமாட்சியம்மன் ஆலயக் காட்சி காஞ்சிபுரம் அண்ணா பிறந்த ஊர் என்பதால் கடந்த முறை அவர் வாழ்ந்த இல்லம் சென்று வந்த நினைவில் இந்த முறை திருத்தலங்களைப் பார்த்துவரலாம் என்று புறப்பட்டோம்.காஞ்சி   சைவ வைணவக் கடவுளர்களுக்கான திருத்தலங்களின்  பெருநகரம். காஞ்சிபுரப் பட்டுப்புடவைகள் நெய்யப்படும் சிறுதொழில் நிறைந்த நகரமும்கூட. சாலை நெருக்கடியில் பல இடங்களைப் பார்க்கமுடியாமல் போகலாம் என்பதால் காலையிலேயே துயிலெழுந்து கிளம்பிவிட்டோம். பத்ரி எங்களுக்கு முன்னர் எழுந்து காலை உணவு தயார் செய்துவிட்டு பைரவாவை காலை நடைக்குக் கொண்டு சென்று தயாராகக் காத்திருந்தார். நாங்கள் திட்டமிட்டபடி இலக்கைப் போய் அடைந்தோம். முதலில் நாங்கள் தரிசித்த கோயில் காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோயில்.காஞ்சி   காமாட்சி , மதுரை மீனாட்சி , காசி விசாலாட்சி என்று முப்பெருந்தேவிகளைக் குறிப்பிடும் சொற்றொடரின் காஞ்சி காமாட்சியை இம்முறை பார்க்க வாய்ப்புக் கிட்டியது. மதுரை மீனாட்சியை பலமுறை தரிசித்தாயிற்று.காசிக்குப் போயும் விசாலாட்சியைப் பார்க்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்

பயணக் கட்டுரை 13 : இருபதும் எழுபதும்

13. ஜெயகாந்தனின் கர்ஜனை. சொல்லாமல் இருப்பது போலவே தோன்றுகிறது சொல்லிய  பின்பும் உரையாடல் அரங்கில் பேசிய கவிஞர் ரவி சுப்ரமணியனின் கவிதை இது விஷ்ணுபுரம் விழாவின் உரையாடல் அரங்கத்தில் பேசப்பட்ட சிலவற்றை விட்டுவிட்டேன்.  குறிப்பெடுக்காமல் விட்டதால் வந்த தவறு. கவிஞர் ரவி சுப்பிரமணியத்துடனான கேள்வி பதில் அங்கத்தில் பல சுவையான செய்திகளைப் பதிவு செய்யவேண்டும். ரவி சுப்பிரமணியம் நவீனக் கவிஞர் மட்டுமல்ல ,சங்கீதம் முறையாகக் கற்றவர் . எனவே இனிமையாகப் பாடக்கூடியவர். இசையமைப்பாளரும் கூட. அவர் ஓர் ஆவணப்பபட இயக்குனர் என்பது அவரின் கூடுதல் திறன். யாப்பிலக்கண கவிதைகள் மட்டுமே இசையமைப்பதற்கு ஏதுவானது என்ற வழக்கத்துக்கு முரணாக அவர் நவீனக் கவிதைகளை இசையமைத்துப் பாடியிருக்கிறார்.நவீனக் கவிதைகள் எதுகை மோனை சந்தம் சீர் போன்ற அடிப்படை யாப்பைக்கூட பின்பற்றாது. எனவே இசைக்குள் நிற்காது என்பது பலகாலமாகச் சொல்லப்பட்ட தகவல். ஆனால் நவீனக் கவிதைகளை அவர் பாடிக்காட்டும் போது அவை இசைக்குள் கச்சிதமாக இயங்குவதை ரசிக்கமுடிந்தது. ராக ஆலாபனைக்குள் வலைந்து நெளிந்து  இணைகிறது யாப்பற்ற கவிதைகள்.இளைய ராஜாகூட கவிதைய