அன்பழகன்,சைமன், முனைவர் குறிஞ்சி வேந்தன், கோ.புண்ணியவான் 7. ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும் நவம்பர் 28 காலை ரம்யாஸ் விடுதியின் ஐந்தாவது மாடியில் காலை உணவு வகைகள் 100க்கு மேல் இருந்தன. You name it என்று சொல்வதற்கொப்ப எண்ணற்ற வகைகள். ஆனால் என் வயிறு ஒரு இட்லிக்கு மட்டுமே திறந்து மூடிக்கொள்ளும். ஒரு கப் காப்பி அவ்வளவே. மணி 11.00 காலையில் வாடகைக் கார் வரும் கல்லணை பார்க்கலாம் என்று சொன்னார் சைமன்.நான் கல்லணையை ஏற்கனவே இருமுறை பார்த்துவிட்டேன். என்னைக் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டிருந்தது.கடந்த மாதம் மனைவியோடு போனபோதுகூட பார்த்துவிட்டுத்தான் வந்தேன். எனக்கு விருப்பமில்லை என்றாலும் நண்பர்கள் சேர்ந்து எடுத்த முடிவு.கலந்து கொண்டேன். திரண்டுவந்து மோதிச் சீறும் ஆற்றைப்பார்ப்பது எப்போதுமே மனம் களிப்புறும். பஞ்சுப்பொதிகளாய் விம்மிப் புடைத்து உடையும் குமிழிகள் நிலையில்லாத மானுட வாழ்வைப் பிரதிபலிப்பவை.பரந்து விரிந்து காட்சிதரும் நதியை கண்கள் தரிசிப்பது ஒரு வகை சுகானுபவம். குளிர்மை உள்ளுடல் முழுதும் நிலத்திலிருந்து ஊ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)