Skip to main content

Posts

Showing posts from October 16, 2011

உன்னை நன்றாக இறைவன் படைத்தனன் என்னை நன்றாகக் கொள்ளையிடுவதற்கே

என் நினைவு இடுக்கில் ஒரு கரப்பான் பூச்சியைப்போல உள் நுழைந்துகொண்டாய் முன் அறிவிப்பு ஏதுமின்றி ஒரு ஆதர்ஸ விருந்தாளியாய் உன்னை மறக்க நினைத்து மறக்காமல் இருக்கிறேன் உன்னைத் துறக்க நினைத்து பின்தொடர்கிறேன் உன்னை மறுதலிக்க மறுதலிக்க குருத்தாய் மறுபடி மறுபடி பிரசன்னமாகிறாய் உன்னைத் திரும்பிப்பார்க்கவே திரும்பிப் பார்க்காமல் கடக்கிறேன் உன்னிடம் பேசவே மௌனமாகிறேன் உன்னை நெருங்கி வந்தே தூரமாகிறேன் துயிலின் விளிம்பில் இமையைத் துளையிடுகிறாய் கனவின் கதவுகளைத் கறாரய்த் தள்ளித்திறக்கிறாய் நரம்புகளில் நிரம்பி வழிகிறாய் உன் அழைப்பு அதுவென புன்னகையில் சிலிர்க்கிறேன் நரம்புகளில் சந்தேகக் குருதி இரு அணுக்களையும் புறமுதுகிடச் செய்கிறது இச்சை  இறுமாப்பு கொண்டு அடங்க மறுக்கும் அலெக்சாந்தர் குதிரையாகிறது நான் உன்னோடு எனக்குள் பேசிக்கொள்கிறேன் பேசிப் பேசிப் என் பொழுது கணப்பொழுதும் சாய்ந்ததேயில்லை மையிருட்டில் தரிசிக்கும் தருணம் அலாதியானது அப்போது எனக்காகத் ஒரு காட்டு மலரைப்போல்  காத்திருக்கிறாய் உன் வசீகர பிம்பம் மனதுக்குள் அடங்காது எரிகிறது என் போர்

கதை எழுதலாம் வாங்க

                            திரு. குமாரசாமி                            பயிற்சி ஆசிரியர்கள்                            அடியேன்        பினாங்கு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஒரு சிறுகதைப் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதன் விரிவுரையாளர் திரு குமாரசாமி என்னை அக்டோபர் 8ஆம் தேதியே அழைத்திருந்தார். அந்தத் தினத்தன்று போர்ட் டிக்சனில் புதுக்கவிதை கருத்தரங்கில் நான் பேசுவதாக இருந்தது. எனவே என் சௌகர்யம் கருதி கதைப்பயிலரங்கை 14 ஆம் தேதிக்கு மாற்றினார்கள். நான் அந்தக் கல்லூரியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேனே தவிர போனதில்லை. அங்கே தமிழ் ஒரு பாடமாக கடந்த ஆண்டுதான் அறிமுகமாகி நாகராஜன் அதன் முதல் விரிவுரைஞரானார். இப்போது குமாரசாமியும் அவரோடு இணைந்துகொண்டார்.      பினாங்கு எனக்குப் பிடித்த ஊர்களில் ஒன்று. தீவு என்றாலே ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். என்ன வகை ஈர்ப்பு என்று துல்லிதமாகச் சொல்லத்தெரியவில்லை. கடல் முட்டுக்கொடுத்து நிற்பதாலா? ஈரக்காற்று எந்நேரமும் இலவசமாய் தொட்டுச்செல்வதாலா? மரங்கள் நிறைந்து மணப்பதாலா? வானுயர் கட்டடங்கள் வாவென்று அழைப்பதாலா? தெரியவில்லை. உள்