மலைகள் மாடுகள் ஏரிகள்~7 உலங்கு வானூர்தியின் வழி திமிங்கலத்தைப் பார்க்கலாம் என்றவுடன் ஆர்வமாகிவிட்டோம். கண்டிப்பாய் பர்க்கமுடியுமா என்று விசாரித்தோம். அது உங்கள் அதிர்ஸ்டத்தைப் பொறுத்தது என்றார் விமான ஓட்டி. (அதுக்கு அதிர்ஸ்டம் வேண்டும் எங்களைப் பார்க்க!) . 10 பேரில் இருவருக்கு அது போன்ற வாய்ப்பு கிட்டுவதில்லை. என்றார். நமக்கும் அப்படி ஆகிவிட்டால் என்னாவது என்று பின் வாங்கினோம். அரை மணிநேரப் பயணம்தான். ஆனால் தாழப் பறந்து காட்டுவார்கள். விலை மிக அதிகம். திமிங்கலத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டுவதும் சுலபமல்ல. அந்தச் சுற்றுலாத் தளத்தை அரசே நடத்துகிறது. அங்கிருந்து கிரைஸ்சர்ச் நோக்கிப் பயணமானோம். நாங்கள் பெர்ரியில் ஏறும்போதே கிரைஸர்ச்சுக்குப் போகும் மலையோரப் பாதை முன்னர் எரிமலை வெடித்த காரணத்தால் மூடப்பட்டுவிட்டது என்று எச்சரிக்கப் பட்டது. ஆனால் தென் தீ வுக்குப் போய் இரண்டு நாட்களில் திறந்துவிடப் பட்டிருந்தது. நாங்கள் சுவிட்சர் லாந்தில் பார்த்ததுபோல மலைகளைக் குடைந்து போடப்பட்ட நெடுஞ்சாலைகள் இங்கே பெரும்பாலும் இல்லை . பொருட்செலவு அதிகம் உண்டாகும் என்பதனால். அதற்குப் பதிலாக
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)