Skip to main content

Posts

Showing posts from November 8, 2009
vanakkam ! hindraf makkal sakti thodarbaana kaddurai nanru,iruppinum minnal velichathil mulaikkum kaalan pohll makkal sakti kadchiyin muthal mugavariyai adayaalam kandu atha muthal yemaadru kalappaiyai udaitheriya vehddiyathu kaddurai asiriyarin kadamai. nanri Se.Gu

பொழுதும் தொலைந்துபோகும் உரையாடல்கள்

மகளும் மருமகளும் வீடு திரும்ப எட்டுக்குமேல் ஆகிவிடும் தொலைக்காட்சி சேன்னல் சண்டை மடிக்கணினி கைத்தொலைபேசியில் கனிவுக்கரிசனம் ஒழுகும் உரையாடலுக்குப்பின் மொனமாகிவிடும் மீண்டும் பகலெல்லாம் பூட்டிக்கிடந்த அண்டை வீடுகளும் இரவில்தான் வெளிச்சம் உயிர்க்கும் வாய்ச்சண்டைபோடவாவது அவள் உயிரோடிருந்திருக்கலாம் நான்கு வயது முடிவதற்குள் பேரனையும் பாலர்பள்ளிக்கு கடத்திவிட்டார்கள் வீடு திரும்பவும் வெள்ளையுடுத்தி தைக்குவாண்டோவுக்கும் ஜிப்பா உடுத்தி சங்கீத வகுப்புக்கும் போய்வருவதில் அந்தி முடிந்துவிடும் களைப்பில் உறங்கும் பேரனை எழுப்பி எப்படிப்பேசுவது பழையபடி? கோ.புண்ணியவான். Ko.punniavan@gmail.com
பிரிந்துவிட்டோமே எனும் வலிக்கும் தருணங்களில் நமக்கான காதல் மீண்டும் பூக்கிறது உன்னை வழியனுப்பும் தருணங்களில் நீ திரும்பக்கிடைக்க மட்டாயா என்ற எதிர்பார்ப்பில் நீ திரும்பிப்பார்க்க மீண்டுமொருமுறை பூக்கிறது. கோ.புண்ணியவான்.

அதே பெண்ணை இன்று மீண்டும் பார்த்தேன்

2007 ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு அந்திசாயும் வேளையில் சுங்கைப்பட்டாணி சுப்பிரமணியர் தேவஸ்தானத்தின் வாயிலில் பெரிய பேன்னர் ஒன்றைக்கட்டுவதற்கான வேலையில் நானும் நண்பர் செபஸ்டியனும் வேறு சில நண்பர்களும் ஈபட்டிருந்தபோது மேற்கு திசையிலிருந்து நடந்துவந்த ஒரு பெண் எங்களைப்பார்த்ததும், நின்று விட்டாள். நாங்கள் கொஞ்சமும் எதிர்ப்பாராதவாறு, “என்னைக்கொண்டுபோய் பஸ் ஸ்டேசனில் யாராவது விடமுடியுமா?” என அதிகாரக்குரலில் பேசத்துவங்கினாள். எல்லாரும் வேலையை விட்டு விட்டுத் திரும்பிப்பார்த்தனர்.கையில் ஒரு பாலித்தின் பையிருந்தது. ஐந்தடிக்கும் குறைவான குள்ளம். கண்டிப்பாய் முப்பத்து மூன்று வயதைக்கடந்திருக்கும் உடல். நேர்த்தியாக உடையணிந்திருந்தாள். சற்று செழிப்பான ஸ்தனங்களும் பிட்டங்களும் அவளுக்கு. அவளின் அதிகாரத்தோரணையைப் பொருட்படுத்தாமல் அவளுக்கு உதவி செய்யும் மனோபாவத்தோடு “இந்த நேரத்தில் என்ன தனியா வரீங்க? தொனைக்கு யாரும் கூட வர்லியா?” கரிசனத்தோடு கேட்டு வைத்தேன். “இல்லைங்க அதான் ஒங்கள கேக்குறேன்,” என்றாள். முதல் பார்வையுடன், அவளின் உரையாடலைப்பொருட்படுத்தாமல் மற்ற அனைவரும் பேன்னர் கட்டுவதிலேயே கவனமாக இ