Skip to main content

Posts

Showing posts from January 8, 2012

அன்னை என்ற தீபம் அணையாது எரிகிறது

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும். அம்மா என்ற தலைப்பில் கவிதை கேட்டார்கள் ‘அம்மா’ என்றேன் உடனே, கேட்டது அம்மாவாக இருந்தால் இன்னும் சின்னதாய் சொல்வேன் ‘நீ’.....என்று                     ...தாஜ்       இந்தக்கவிதை ஆனந்தவிகடன் இதழில் 2002 ஆம் ஆண்டு நடத்திய கவிதைப்போட்டியில் எழுபத்தைந்து சிறந்த கவிதைகளில் ஒன்றாக பதிவாகியது. கடுகளவே இருக்கும் இந்தக் கவிதை மனதுக்குள் பூமழை பொழிவதை உணரமுடிகிறது.  வெப்பம் உரசியதும் நெகிழ்ந்துருகும் நெய்யைப்போல அம்மா என்ற சொல்லுக்குள் அன்பும் பாசமும் பிரவாகமாவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெறும் சொல்தானே என்று புறந்தள்ள முடிவதில்லை, அதற்குள் உறைந்திருக்கும் உணர்வும் உயிர்த்துடிப்புள்ளவை!. எல்லாச் சொற்களுக்கும் தாய்ச்சொல்லாக தன்னை நிறுவிக்கொள்கிறது அம்மா என்ற அற்புதச் சொல். உயிரெ¦ழுத்தும், மெய்யெழுத்தும் உயிர்மெய்யை உருவாக்குவதுபோல அம்மா என்ற ஒற்றைச் சொல்லுக்குள் உயிரும்    மெய்யும் இரண்டரக் கலந்து நிற்கிறது.        ஒருமுறை என் நண்பன் ஒருவன் என்னைத் தன்னோடு ஓரிடத்துக்கு வரும்படி அழைத்திருந்தான். எங்கே என்றெல்லாம் நண்பனிடம் கேட்கத்தோணவில்லை. என