முத்தம் 2 ஜூலை 22 இரவு 6.30க்கு கே ஏல் ஐ ஏ '2 விமானத் தளத்தில் இருக்கவேண்டும். எத்திஹாட் விமானம் மூலம் 8.30 க்கு பயணம் தொடங்கும். கிள்ளானில் தெலுக் பங்லிமா காராங்கிலுள்ள என் மைத்துனர் எங்களை விமானத் தளத்தில் விடவேண்டும். நாங்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது மணி 11.30. இடையில் எங்கும் நிற்கக்கூடாது என்பதற்காக உணவைச்சமைத்து பொட்டலம் செய்து எடுத்துக்கொண்டு காரிலிலேயே சாப்பிட்டாக வேண்டும். நெடுஞ்சாலை பயணம் என்றாலும் எங்கேயும் பயண இடையூறு நேர்ந்தால் குறிப்பிட்ட நேரத்தில் போய்ச்சேர முடியாது. குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு முன்னரே விமானத் தளத்தில் இருக்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். 110 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும் வேண்டும். ஏற்கனவே ஆளாலுக்கு நான்கைந்து வேகம் மீறல் தண்டங்களை அரசாங்கத்துக்கு பாக்கி வைத்திருந்தோம். என் மருமகன் அரசாங்கம் செழிப்பாக இருக்கவேன்டும் என்பதில் அளவுக்கு மீறிய அக்கறையுள்ளவர். அவர் ஒரு கட்டு சமன்கள் வைத்திருப்பார். அபுடாபி விமான நிலையம் குடிமக்களிடமிருந்து வரியை எப்படிப் பறிப்பது என்று மலேசியாவிலிருந்து பிற...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)