Skip to main content

Posts

Showing posts from October 11, 2009

என் சவாரியும் அப்பா என்ற குதிரையும்

அப்பாவின் விவரமறியா பொழுதுகளில் அவரின் முதுகு என் சவாரிக்குப்பயனானது அவரின் தோள்கள் உலகம் காண தோதானது பின்னர் உச்சிமுகர்ந்து தலைக்குமேல் தூக்கியபோது பிரபஞ்சம் புலனானது நான் எகிரி குதித்த தருணங்களிலெல்லாம் நெஞ்சு பஞ்சு மெத்தையானது மிச்சமிருந்த அனைத்தையும் அனுபவித்த நான் எனது விவரம் புரிந்த பொழுதுகளில் நான் எனது குடும்பம் குழந்தைகளென எனதான இருத்தலியலில் அப்பாவுக்காக என் நகக்கண் கூட மிஞ்சவில்லை. கோ.புண்ணியவான்

விழுங்கப்பட்டவை

கலடிச்சுவடுகள் கடற்கரை நெடுக்க நடந்துகிடந்தன. மருமகள்களை மிதித்தவை சில பிள்ளைகளை சபித்தவை சில உடன்பிறப்புகளை வெறுத்தவை சில மனைவிக¨ளை மறந்தவை சில என அலைகள் எல்லாவற்றையும் அழித்தன காதலனை நம்பி ஏமாந்து கடலுக்குள் புகுந்த கற்பிணிகளின் காலடிச்சுவடுகளைத் தவிர்த்து. கோ.புண்ணியவான் Ko.punniavan@gmail.com