முத்தம் 1. என் மருமகனும் மகளும் ஐரோப்பிய பயணம் தொடர்பாக எங்களுக்கு எந்த முன் திட்டமும் இல்லை. விமான டிக்கெட்டுகளை மட்டும் முன் பதிவு செய்திருந்தார் என் மருமகனார்.(ஐரோப்பிய பயணத்தை நேர்த்தியாக செய்து முடித்திருந்ததால் இநத 'னார்'.) மற்றபடி அங்கே போனதும்தான் மற்ற ஏற்பாடுகள் எல்லாம். ஆண்டு தொடக்கத்தில் பஹாருடின் பயண நிறுவனத்தோடு போகலாம் என்றே குடும்பத்தில் அறுவர் முன்பணம் செலுத்தியிருந்தோம். என் மகன், மருமகள், என் மகள், என் மருமகனார், என் தர்ம பத்தினி, நான் ஆகியோர் அந்த அறுவர். பஹாருடின் பயண நிறுவனம், பயணிகள் போதாமையால் அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவித்து விட்டார்கள். ஆனாலும் என் மகள் விடுவதாயில்லை. பயணம் செய்யலாம் என்ற மனநிலையிலேயே நிலைத்துவிட்டிருந்தாள். நாம் சொந்தமாக ஏற்பாடு செய்யலாம் என்றே வலியுறுத்து வந்தார். எனக்கு அவ்வளவு விருப்பமில்லை. பஹாருதின் விதித்த அதே தொகையில் போய்வர ஏற்பாடு செய்கிறேன் என்றார். ஐரோப்பாவில் எல்லாமே நேரப்படி நடந்தேறும். தொல்லைகள் இல்லாத நாடு, அங்கே பொதுப் போக்குவரத்து குறையில்லாமல் நடக்கும்., என்றெல்லாம் என்னைக் கவரப் பார்த்தார்கள். ...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)