Skip to main content

Posts

Showing posts from January 5, 2020

பயணக் கட்டுரை 12 : இருபதும் எழுபதும்

12. பத்தாவது ஆண்டு விஷ்ணுபுர இலக்கிய விழாவும் உரையாடலுக்கான அங்கமும் காலை 9 மணிக்கெல்லாம் ராஜஸ்தானி மண்டபம் கலைகட்டிவிட்டது. மளமளவென சுமார் 300க்கும் மேலானோரால் மண்டப இருக்கைகள் நிரப்பப்பட்டுவிட்டன. வாசலில் மூன்று இடங்களில் புத்தகங்கள் விறபனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான் தேடிய பல நூல்கள் அங்கிருந்தன. நவீன எழுத்தாளர்களின் நூல்கள் நிறைய கிடந்தன. சிலவற்றை நேரம்  கிடைக்கும் போதெல்லாம் ஒரு சில பக்கங்களை வாசித்து வாசித்து வாங்கி வைத்துக்கொண்டேன். இப்போதே 10 கிலோவைத் தாண்டிவிட்டிருந்தது. சென்னையில் போய் வாங்கவேண்டுமென்ற திட்டத்தை  கைவிட்டேன். நான்கைந்து புத்தகங்களை மட்டும் கோவை விற்பனையாளர்கள் சென்னை கடைக்காரர் உங்களைத் தேடி வந்து கொடுப்பார் என்றார். அப்படியேதும் நடக்கவில்லை. நாங்கள் தான் போய் வாங்கினோம். ஜெயமோகனைப் பார்த்துப் புன்னகைத்தேன். என்னை யாரோவென்று பார்த்தார்.மீண்டும் காலை பசியாறலின்போது கை கொடுத்தேன் சரியாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் முதல் நாள் கடைசி அங்கத்தில் கவிஞர் ரவிசுப்பிரமணியத்தின் கலந்துரையாடல் முடிந்தவுடன் என்னை அவரை கௌரவிக்க அழைத்தார்கள். அதன் பின்னரே நான்

பயணக் கட்டுரை 11 : இருபதும் எழுபதும்

11. சிறுவாணி நீரூற்று சிறுவாணி நீரூற்று   அன்று இரவு 11 மணிக்குத் திருவண்ணாமலையிலிருந்து பேருந்து புறப்பட்டது. சொகுசுப் பேருந்துதான்.  நெடுஞ்சாலையில்தான் ஓடியது. சில பயணப்பேருந்துகளில் பயணம் செய்வது நீங்கள் இலக்கையடையும்போது உங்கள் உள்ளுறுப்புக்களை உங்களின் அனுமதியில்லாமல் இடம் மாற்றி வைத்துவிடும். ஆனால் தமிழக நெடுஞ்சாலை ஓட்டம் கிட்டதட்ட மலேசியாவை ஒத்தது . அதனால் அலுங்காமல் குலுங்காமல் போய்ச் சேர்ந்தோம். கோவை விடிகாலை 3-க்குச்  சாம்பல் பூத்திருந்தது. பனி சன்னமாய் பொழிந்துகொண்டிருந்தது. வாகன சத்தங்கள் குறைந்து  சாலை ஓய்ந்திருந்தது. இரவு மனிதர்கள் சிலருக்காக டீக்கடைகள் விழித்திருந்தன. கொதிநீர் பானையிலிருந்து ஆவி கலைந்து கலைந்து பறந்துகொண்டிருந்தது. அது வெறும் நீராவிதான் என்று ஹரிக்கு தைரியமூட்டிக்கொண்டிருந்தேன். உறக்கம் என் விழிகளுக்கு மிக அருகில் நின்று கவ்வியபடி இருந்தது. இந்த விடுதியை ஹரி இணையத்தின் மூலம்  பதிவு செய்து வைத்திருந்தார். வேஸ் மூலம் நடந்தே இலக்கை அடைந்தோம்.விஷ்ணுபுர விழா நடக்கும் ராஜஸ்தானி சங் மண்டபம் இங்கிருந்து வெகுதூரமில்லை. விஷ்ணுபுர நண்பர் செந்திலு

பயணக் கட்டுரை 10 : இருபதும் எழுபதும்

10. ஞான பூமி நாங்கள் டாக்டர் மாணிக்கம் தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் அங்கே நடக்கும் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக் காட்சியைக் காண நேர்ந்தது. தமிழ்நாடு முழுவதும் கட்சி சார்ந்த பிரச்சாரக் கூட்டங்களைக் கடந்து வந்தாலும் இதனை மட்டுமே படம் எடுக்க வாய்த்தது. பவா செல்லதுரை நூலகம் திறக்குமிடம்  4 கிலோ மீட்டருக்குள் இருக்குமென்றார். பவா கடந்த ஆண்டு கூலிம் நவீன இலக்கியக் களம் நடத்திய இலக்கியக் கூடலுக்கு வந்திருந்தார். அவரையும் சு. வேணுகோபாலையும் என் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தேன். அதனால் நான் நினைவில் இருந்தேன். ஹரி பேசிய காரில் அவர் இலக்கியக் கூடல் நடத்தும் இல்லம் சென்றோம். வயல்வெளிக்கு நடுவே ஒரு 'தீவு' நிலத்தில் அந்த இடம் அமைந்திருந்தது. சுற்றிலும் நிழல் மரங்கள் சாமரம் விரித்திருந்தன.வயல் பரப்பின் வெட்ட வெளி பாதிக்காத வண்ணம் அந்த இடம் தாய்க்கோழி தன் குஞ்சுகளை  ரெக்கைகளால் பாதுகாப்பதுபோல மரங்களால் மூடப்பட்டிருந்தது. திறந்த வெளியின் இளம்காற்று  இதமாக வீசிக்கொண்ருந்தது. வீட்டுக்குச் செல்லும் நடைப்பாதையின் இரு மருங்கிலும் நிழல் மரங்களின் வ

பயணக் கட்டுரை 9 : இருபதும் எழுபதும்

9. தமிழகப் பேருந்தில் ஓடிக்கொண்டே ஏறும் பயிற்சிப்பட்டறை  திருச்சிக்குப் போகும் வழியில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத் தரிசனத்தை முடித்துவிடலாம் என்றார் ஹரி. நான் முன்பின் கேள்விப்பட்ட இடமில்லை. ஆனால் படைத்த பிரம்மாவைப் பார்த்துவிடலாம் என்றே பயணப்பட்டோம். இங்கு வழிபட்டால் 12 சிவ தலங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.பிரம்மன் உருவாக்கிய  பிரம்ம தீர்த்த  குளமும் , சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு இருக்கின்றன.சிவபெருமான் பிரம்மனின் தலையைக் கிள்ளி  எறிந்த தளம் திருக்கண்டியூர். அந்த பிரம்மன் பரிகாரம் தேடிக்கொண்ட ஊர்தான் திருப்பட்டூர். அதனால் பிரம்மாவை வணங்கும்போதே சிவபெருமானையும் வணங்கும் பாக்கியம் பெறுகிறோம். பதஞ்சலி முனிவரின் சமாதியும் இந்த ஆலயத்தில் இருப்பதால், பொது மக்கள் திரண்டு வரும் ஸ்தலமாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது. திருப்பட்டூர் ஆலயத்தைப் பற்றித் தேடும் போது அத்தலத்தைப் பற்றிய இத்தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. திருப்பட்டூர் ஆலய முகப்பில்  டாக்டர் மிமியும் அவர் கணவரும் எங்களைக் அவர்கள் காரில் திருச்சிக்கு ஏற்றிக்கொண்டு சென்றனர். இந்தப் பயணத்தில் நா

பயணக் கட்டுரை 8 : இருபதும் எழுபதும்

8.  கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை காமாட்சி உணவகத்தின் சுவை மாறுமுன்பே கொல்லிடம் கல்லணைக்குப் பயணமானோம். தஞ்சையிலிருந்து திருச்சிக்கு ஒரு மணிநேரப் பயணம்தான்.திருச்சியிலிருந்து கொல்லிடத்துக்கு முக்கால் மணி நேரப் பயணம். சில பயணங்களின்போது கல்லணையைக் கண்ணாறக்   காணவேண்டுமென்று ஆட்டோ ஓட்டுனர்களைக் கேட்டபோது , அது ரொம்ப தூரம் சார். ஆட்டோ சவாரிக்கு போவாது சார் என்று என் எண்ணத்தை மழுங்கடித்துவிடுவார்கள். கார் பயணத்தில் முக்கால் மணி நேர ஓட்டம் ஆட்டோ சவாரிக்கு  வெகுதொலைவில்தான். மழைக்காலம் முடிவடையும் காலமாதலால்   தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.கண்ணெட்டும் தூரம் வரை நீர் மைதானம் பரந்து கிடந்தது. நீர்ப்பெருக்கு நீரணையில் மோதி சீறிப்பாய்ந்து நதியில் சேர்ந்து கும்மாளம் போட்டது.எட்டியிருந்து பார்த்தபடியே  உடல் நனைய குளித்துக்கொண்டிருந்தோம். நீர்ப்பரப்பைத் தொட்டு வந்த காற்று இனிமையாய் மோதிச்சென்றது. வானம் நீர்ப்பரப்பைக் கண்ணாடியென நினைத்து முகம் பார்த்து ஒப்பனை செய்துகொண்டிருந்தது. கல்லணை நீர்ப்பரப்பு என் மீது தியானத்தை ஏற்றிவைத்ததுப்போல நான் சில கணங்கள் மெய்மறந்திருந்தேன். கல்லணையை

பயணக் கட்டுரை 7 : இருபதும் எழுபதும்

7. இடைச்சிக்கல்லும் கரிகாலன் கல்லணையும் மதுரையிலிருந்து திரும்ப தஞ்சைக்குக் கிளம்பும்போது இரவு சூழ்ந்துவிட்டது.நாங்கள் வாங்கிய புத்தகங்களை நியூ சென்ஞ்சுவரி புத்தகக் கடையில் திரும்பப் போய் எடுக்க எந்தத் திசையில் போவது என்று தெரியாமல் சுற்றிச் சுற்றி வந்தோம்.வடக்குத்  தெரு, கிழக்குத் தெரு, மேற்குத் தெரு, தெற்கு தெரு எதுவென கண்டுபிடிக்க முடியாமல் போன திசைக்கே மீண்டும் போய் இல்லை இது  இல்லை வேறு தெரு என்று மேலும் மேலும் குழப்பம்,மதுரை மீனாட்சி கண் பாரம்மா என்று வேண்டிக்கொள்ள கடைசியில் கண்டு பிடித்தோம். எத்தனை ஆயிரம் பேரைத்தான் மீனாட்சி சமாளிப்பாள். அவள் பல்லாயிரம் ரூபத்தில் வருவாள். அவளுக்கான டியூட்டியே எளிதாய் முடிந்துவிடுகிறது. ஒரு வழியாகப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டவுடன், கடைக்காரர்  ஒரு முதியவரைக் காட்டி இவரு யாரு தெரிதா? என்றார். பார்த்த மாதிரியும் இருந்தது பார்க்காத முகம் மாதிரியும் இருந்தது. நாங்கள் கொஞ்ச நேரம் விழிக்க இவருதான் திறனாய்வாளர் பேராசிரியர் தி சு நடராஜன் என்றார்.திறனாய்வுக்கலையைக் கற்கவேண்டி அவர் நூல் ஒன்றை இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி வந்து வாசித்த நி