Skip to main content

Posts

Showing posts with the label என்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை

என்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை

                                                               கோ.புண்ணியவான்             மீண்டும் அப்பாவின் அறை ஒளியில் உயிர்பெற்றிருந்தது. கணினித் திரையை அடைத்துவிட்டு அப்பாவின் அறைய நெருங்கினேன். கதவு தாழ்ப்பாள் இடப்படாமல் சிப்பியில் வாய்போல லேசாக பிளந்திருந்தது. அப்பா அம்மாவின் பொட்டுவைத்த நிழல் முகத்தை அசையாது பார்த்தபடி இருந்தார். தான் இழந்த புற உலகை நினைத்து பெருமூச்செரியும் சுயசோகம் கசியும் நோக்கு. வலது கையைச் சுவரில் முட்டுக்கொடுத்தபடி. கொசுறாக சோகம் இழையோடும் முனகல். அம்மா தவறியதிலிருந்து உடல் இளைத்து பழைய முகப் பொலிவை இழந்துவிட்டிருந்தார். முதுகு கூன் விழத் துவங்கியிருந்தது. அஜானுபாகுவான உடல் அமைப்பு கூனை வலிந்து காட்சிப்படுத்தியது. ஆண் தினவு உடைந்து நொறுக்கிவிட்டதன் புற அடையாளமாகத்தான் அந்தக் கூன். கண்களுக்குக் கீழ் கரு வளையம். அப்பாவின் இருப்பு முற்றிலும்  அடையாளம் இழந்துகொண்டி...