ஸ்பேய்ன் மண்ணை மிதித்தோம் முத்தங்களால் நிறைந்த தேசம் என்ற தலைப்பிட்டு, மூன்று அத்தியாயங்கள் முடிந்தும், முத்தங்களைக் காணாமல் பதற்றமாகியிருக்கிறார்கள் இந்தப் பயணக் கட்டுரையை வாசிப்பவர்களில் சிலர். முத்தங்கள் தேசத்துக்குள்ளேயே இன்னும் நுழையவில்லையே. எப்படி நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும்? அரபு மண்ணிலிருந்து இப்போதுதானே ஐரோப்பிய மண்ணுக்கு நுழைந்திருக்கிறோம். ஐரோப்பாவில்தானே இச் இச்சு கேட்கும். உங்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக அரபு தேசத்திலா இச் இச்சை உண்டாக்கமுடியும். ஷரியா சட்டப்படி என் மேல் கல்லெரிந்தே கொன்றுவிடுவார்கள். நான் முத்தக் காட்சிகளை எழுதாமல் இழுத்தடிக்கிறேன் என்ற கோபத்தில் நீங்களும் உங்கள் பங்குக்குக் கல்லெறிவீர்கள். அதில் உங்களுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். எலிகப்டரில் போற சனியனை ஏணி கொடுத்து இறக்கிய கதையாகிவிடும். கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் ஐயா. முத்தக் காட்சியை நெருங்கிவிட்டோம். இங்கிலிஷ் படத்தை அதிகம் 'ரசிக்கும்' மக்களிடம் போய் முத்தங்களால் நிறைந்த தேசம் என்று தலைப்பிட்டுவிட்டு முத்தக் காட்சிகளைக் காட்டாமல் கட்டுரையை இழுத்துக் கொண்டு போகிறேன் என்று தவறாக நி...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)