சிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2 முதல்நாள் கலந்துரையாடலைப் பற்றி இராஜ கணேஷின் முகநூல் பதிவு தெளிவாக இருந்தது. நானும் எழுதினால் சுவை திகட்டிவிடலாம். எனவே நான் நேற்று எழுதிய பதிவில் லிங்க் கொடுத்திருக்கிறேன். Balu Manimaran என்ற முகநூல் தளத்தில் வாசிக்கலாம். மலேசிய இலக்கியம் குறித்து பெரும்பாலான தீவிர எழுத்தாளர் பார்வை ஒன்று போலத்தான் இருக்கும். ஆனால் மலேசிய இலக்கியத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பவர் ஒரு சிலர் மட்டுமே. அவர்கள் இலக்கிய அமைப்புகள் வழி பதவியைப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் அமைப்பின் பெய்ர் காப்பாற்றப்படவேண்டுமல்லவா? ஒருமுறை ஒரு தினசரி பத்திரிகை ஒரு அறிக்கை விட்டிருந்தது. சிறுகதை பக்கத்தில் அவ்வறிக்கையை வாசிக்க நேர்ந்தவுடன் எனக்குக் கடுப்பைக் கிளர்த்தியது. சிறுகதை எழுதுபவர்கள் நான்கு பக்கங்களுக்குள் எழுதினால் மட்டுமே பிரசுரமாகும், அது பாதி பக்கத்துக்குள் வரவேண்டும் என்று குறிப்பிடிருந்தது அறிக்கை. உப்பு, புளி, மிளகாய், கடுகு, தாளிப்பு, சோம்பு இவற்றை நிரப்பும் ஜாடியாக பத்திரிகை பக்கத்தை அளவோடு ஒதுக்குகிறார்கள் எட...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)