மாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 ரோத்துருவா அழகிய நீர் வீழிச்சிகள் உள்ள இடம். மலைகளிலிருந்து திரண்டு வரும் நீர் ஏரிகளில் விழுகிறது. ஓரிடம் என்றில்லாமல் மலைகளின் பல பகுதிகளிலிருந்து விழும் நீர் கண்களைப் பறிக்கிறது. நீர் ஒர் உன்னதக் குணமுண்டு. அகன்று நிறைந்திருக்கும் ஏரி, கடலாக இருந்தாலும் சரி, திரண்டு இறங்கு நீராக இருந்தாலும் சரி நம் கவனத்தைப் குவிக்கச் செய்து சற்றே அமைதியைக் கொடுக்கும். நம் முன்னோர்கள் பஞ்ச பூதங்கள் பற்றிப் பேசுகிறார்கள். அதில் நீருக்கும் கடவுளுக்கு நிகரான ஓரிடத்தைக் கொடுக்கிறார்கள். ஏன்? நீரின்றி அமையாது உலகம். நீர் இல்லையெனில் இந்தப்பூமிபந்து இல்லை. உயிரினங்கள் இல்லை. வான் சிறப்பில் வள்ளுவன் மேலும் நீருக்கு சிறப்பெய்துகிறான். 'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை' நீர் உணவு உற்பத்திக்கு உதவியதோடு இல்லாமல் நீரே உணவாகவும் பெய்கிறது என்கிறார். அப்படியென்றால் நீர் கடவுள்தானே? அதனைக் கண்கண்ட தெய்வம் என்று ஏன் சொல்லக் கூடாது? ஆகவேதான் நீர் நிலைகள் நம்மை அமைதிப்படுத்துகின்றன. சற்றே நின்று பார்த்து 'தியானி'க்கவும் வைக...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)