என்னுடைய இல்ல நூலகத்தை மறு சீரமைப்பு செய்யும் நேரத்தில்,மலேசிய புதுக்கவிதை கருத்தரங்கின் போது வெளியிடப்பட்ட நூல்கள் கிடைத்தன. அவை புதுக்கவிதை இயக்கம் தொடக்கப்பட்ட வேளையில் வெளியிடப்பட்ட ஆவணங்கள். பின்னாளில் புதுக்கவிதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதை ஞாயிறு பத்திரிகைகள் வழியேதான் தெரிந்துகொள்ள முடிந்தது. நான் என்னுடைய எஸ்பிம் எம்சியி சோதனையை எழுதி முடித்துவிட்டு முடிவுக்காகக் காத்திருந்த காலக்கட்டத்தில்தான் எழுதத் துவங்கினேன். புதுக்கவிதை என் முதல் எழுத்து அல்ல, சிறுகதையே புள்ளையார் சுழியிட்டு தொடக்கி வைத்தது. அப்போதெல்லாம் புதுக்கவிதை என்ற வடிவம் பற்றி யாரும் பேசிக்கூட நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அப்போது அது மெல்ல மெல்ல தமிழ்நாட்டில் வேர்பிடிக்கத் துவங்கியிருந்ததை மலேசிய எழுத்துலகம் அறிந்திருக்கவில்லை என்பதும், அப்படியே கேள்விப்பட்டாலும் அதனைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் வரலாறியும். அன்றைய ஊடகத்துறை இன்றைக்குப்போல நொடிக்கு நொடி அறிவிக்கும் தொழில்நுட்ப ஆற்றலுக்கு வெகுதொலைவுக்குப் அப்பால் இருந்...
சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு. சீ.முத்துசாமி அறிமுகமான தொடக்க காலம்தொட்டே எனக்கும் அவருக்குமான விலகல் தொடங்கிவிட்டிருந்தது .அது என்ன காரணத்தினால் என்று என்னால் அருதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை. சம வயது கலைஞர்களுக்கே உரித்தான காழ்ப்பு மன இயல்பாகக் கூட இருக்கலாம். அவர் யாரிடமும் நெருக்கமாக பழகும் குணமுடையவர் அல்ல. எம் ஏ இளஞ்செல்வனும் அவரும் சமகாலக் கலைஞர்களாக இருந்தாலும் அவர்களிடையேகூட விலகல் இருந்துகொண்டே இருந்ததை நான் அவதானித்தேன். சீ.முத்துசாமி ஒரு தனிமை விரும்பி. சொற்களை அளந்து பேசுபவர். சக நண்பர்கள் விரும்பாத தொனியில் சொற்களை உபயோகிப்பவர். இந்தக் காரணங்களின் பொருட்டே அவர் தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்..அது சில தனிமனிதர்களின் இயல்பு என்று பின்னாளில் புரிந்துகொண்டேன். எனக்கும் அவருக்குமான விரிசல் ஒரு சந்தர்ப்பத்தில் விஸ்வரூபம் எடுத்தது. நான் 1995 முதல் 2005 வரையில் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தேன். நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி அல்ல அது. என்னிடம் வற்புறுத்தி கொடுக்கப்பட்ட ஒரு பணி. லாங்காவியில் ஐந்து ஆண்டுகால ...