Skip to main content

Posts

Showing posts from September 20, 2009

ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை

கோ.புண்ணியவான் அன்றைக்கு நிஷாவுக்கு(அவள் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது சகுந்தலா என்ற அவளின் இயற்பெயரை நிஷா என்று மாற்றியவர் இயக்குனர் குருதேவ்.சகுந்தலா என்ற பெயரை அவளே மறந்து போயிருந்தாள்.அவளின் உறவினரோ, பால்ய தோழிகளோ அவளைத் தெருவில் பார்த்து “ஏய் சகுந்தலா,” என்று எதேச்சையாக அழைக்கும் பட்சத்திலும் அவர் யாரையோ கூப்பிடுகிறார்கள் போலும் என்று தன் போக்கில் நடையை தொடர்ந்தவளாய் இருப்பாள்.சினிமாவுக்குள் நுழைந்துவிட்ட காலந்தொட்டு அவள் நிஷா)பார்வதி வேஷம்.வசனம் ஏதுமில்லை.ஒரு மணி நேரத்தில் சூட்டிங் முடிந்துவிடும்.ஐம்பது ரூபாய் தருவதாக துணை நடிகை ஏஜண்டு ஆசைக்காட்டி அழைத்து வந்துவிட்டான்.ஒரு மணி நேரம் என்பது ஒரு பேச்சுக்காகச் சொன்னது. இரண்டு மணி நேரமகலாம்.ஏன் அதிக பட்சம் மூன்று மணி நேரமாகலாம் என்று தான் அவள் கணித்திருந்தாள்.ஆனால் ஐந்து மணி நேரத்தைக்கடந்தும் படப்பிடிப்பு முடியவில்லை.வசனம் இல்லை சும்மா சிவனின் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கவேண்டியதுதான்.புதிதாய் அறிமுகமாகும் ஒரு சுவை பானத்திற்கான விளம்பரப்படம்தான் என்று ஆசைகாட்டி அழைத்து வந்துவிட்டான்.ஐம்பது ரூபாய் அவள் ஆசையைக்கிளப்பிவிட்டிருந
நாள் : 8/13/2005 9:41:48 PM, -வெங்கடேஷ் பிரிவுகள் தமிழ்க் கவிதையில் வித்தியாசமான முயற்சிகள் சாதனைகள் எப்போதும் உண்டு. முற்றிலும் முரண்பட்ட ஒன்றைச் சொல்லி, அதன் மூலம் மூலப்பொருளை உணர்த்தும் வல்லமை தமிழ்க் கவிகளுக்கு உண்டு. இன்று நாம் பார்க்கப் போகும் கவிதை, கவிஞர் கலாப்ரியா எழுதிய பிரிவுகள் என்ற கவிதை: பிரிவுகள் நாளை இந்தக் குளத்தில் நீர் வந்து விடும் இதன் ஊடே ஊர்ந்து நடந்து ஓடிச் செல்லும் வண்டித் தடங்களை இனி காண முடியாது இன்று புல்லைத் தின்று கொண்டிருக்கும் ஆடு, நாளை அந்த இடத்தை வெறுமையுடன் சந்திக்கும் மேலே பறக்கும் கழுகின் நிழல் கீழே கட்டாந்தரையில் பறப்பதை நாளை பார்க்க முடியாது இந்தக் குளத்தில் நாளை நீர் வந்து விடும் மிக அழகான கவிதை. குளத்தில் நீர் வருவது என்பது கிராமம் முழுவதற்குமே மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. குளத்தில் நீர் வந்து நிறையுமானால், குடிநீர், விவசாயம், அதன் மூலம் கிராம வளம் எல்லாம் பெருகும். உற்சாகம் பெருகும். செயல்பாடுகள் கூடும். வேலைகள் கூடும். உற்பத்தி கூடும். ஆனால், கலாப்ரியா கண்ணில் வேறொன்று படுகிறது. இது
முகப்பு ஞ இயக்குநர் அடூர்கோபாலகிருஷ்ணன் நேர்காணல்:டி.அருள் எழிலன் இயக்குநர் அடூர்கோபாலகிருஷ்ணன் நேர்காணல்:டி.அருள் எழிலன் அடூர் அவரது “நாலுபெண்ணுகள்” படத்திற்காக ஏழாவது முறையாக தேசீய விருது பெற்றிருக்கிறார். 2004-ல் சென்னைக்கு வந்த ஆரம்பகாலத்தில் மலையாளப்படங்கள் எனக்கு ஆதர்ஷமாக இருந்தது. அந்த வகையில் எனக்கு பஷீரின் கதையைத் தழுவி அடூர் எடுத்த மதிலுகள் படத்தின் மூலம் ஏற்பட்டது அடூர் மீதான ஈர்ப்பு. பின்னர் திருவனந்தபுரம் செல்லும் போதெல்லாம் அவரை இயலுமாயின் சந்தித்து சிறிது நேரம் உறையாடி வருவேன். அப்படி சில நேர்காணல்களையும் என்னால் செய்ய முடிந்தது. இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்மவிபூஷன், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பாரத்ரத்னா விருதைத் தவிர எல்லாவற்றையும் பெற்று விட்டார் அடூர். அடூர் அதிகமாகப் பேச மாட்டார் சிக்கனமாக வார்த்தைகளை உபயோகிப்பார் யாருடைய கதையை தழுவுகிறோமோ அவருக்கே கதையில் நேர்மையான அங்கீகாரத்தைக் கொடுப்பார் மற்றபடி அடூர் எடுத்த எல்லா படங்களும் சிறப்பானவைகள் அல்ல திருவனந்தபுரத்தில் அவரைச் சந்தித்த போது, ‘‘நான் இப்போதும் கற்றுக் கொண்டிருக்கிறேன் ச
பாயாஸ்கோப்பில் படம் தெளிவாகவே கிடைத்திருக்கிறது. சை.பீர் முகம்மதுவின் பாயாஸ்கோப் காரனும் வான்கோழிகளும் சிறுகதை மிகச்சரளமாக சொல்லப்பட்ட அவரின் சமீபத்துக் கதைகளில் ஒன்று. கதை தொடக்கத்திலிருந்து கடைசிப் புள்ளிவரை தேக்கமில்லாமல் செல்கிறது. அரை நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த தோட்டத்திருவிழா கோலத்தையும் அன்றைய மக்களின் கேளிக்கை மனோபாவத்தையும், முன்னெடுத்துச்செல்கிறது கதை. கையில் பணப்புழக்கமில்லாத தோட்டப்பாட்டாளிகள் திருவிழா நேரத்தில் கவலையை மறந்து வாழக்கையை ரசித்து அனுபவித்து மகிழ்ந்தத்தை நினைக்கும்போது இப்போது பொறாமையை உண்டாக்குக்கிறது. இப்போது கையில் காசிருந்து என்ன செய்ய? மெகாசீரியல் கதைகள் வாழ்க்கையயை சீரியஸ் ஆக்கி காலையிலிருந்து பின்னிரவுவரை கண்ணீர்மழையில் நனைய வைத்து விடுகிறது. அதுவும் விலை கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்கிற சோகம். வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் இருந்தால் சீராக இருக்காது இல்லையா! அதனால் வானவில் புண்ணியத்தில் துக்கமும் ஊடுருவி சமன் செய்துவிடுகிறது. நம்ம நாட்டில் பாயாஸ் கோப்பு ஏது என்று என் மனைவி கேட்டாள். தோட்டத்தில் வாழ்ந்த அனுபவம் இல்லாதவளுக்கு இந்த பயாஸ்கோப் விஷயம