Skip to main content

Posts

Showing posts from July 3, 2016

3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்

3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள் ஹாட் யாய் நகரத்தை அடைய பசியும் பற்றிக்கொண்டது.                இது பினாங்கில் உள்ளதைவிடப் பத்து மடங்கு பெரிய சயன புத்தர் சிலை ரோபின்சன்' பேரங்காடிக்குப் போனால் அங்கே மலேசியாவில் கிடைப்பது போல சிக்கன் ரைஸ் கிடைக்குமென்றார். ஆனால் வழியை மறந்துவிட்டிருந்தார். ரேய்லவே ஸ்டேசன் ரோடு வழியாகச் சென்றால் ரோபின்சனைப் பிடித்துவிடலாம் என்றார். நகரம் நெரிசலில் திணறியது. நாளை மறுநாள் ஹரிராயா கொண்டாட்டப் பெருநாள். ஹாட்யாயும் சொங்க்லாவும், பட்டாணியும் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் நிரம்பிய ஊர். எனவே நகரம் திணறிக்கொண்டிருந்தது. அலைந்து அலைந்து ரேய்ல்வேய் ஸ்டேசன் சாலையைக் கண்டுபிடித்து ரோபின்சனை அடைந்தோம். மதியம் மணி 3.00. தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் ஒரு மணிநேர வித்தியாசம். ரோபின்சனின் கார் நிறுத்துமிடத்தில் இலவசமாகக் காரை நிறுத்த்லாம். மற்ற இடங்களில் கட்டணச் சிட்டை இல்லாமல் நிறுத்தினால் கிளேம்பிங்தான். இரண்டு முறை அலைந்து ஒரு கார் வெளியானது இடம் கிடைத்தது. ரோபின்சன் கீழ்த் தளத்தில் உணவு சிற்றங்காடிகள் இருந்தன. கட்டணம் கட்டி டோக்கன் வாங்கிக்கொண்டு உணவை வாங

2.தாய்லாந்தில் இரண்டு நாட்கள்

2. தாய்லாந்தில் இரண்டு நாட்கள். டானோக்கில் பானுவுக்காக காத்திருந்த வேளையில் கழிப்பிடம் தேடி அலைந்தேன். பொதுக் கழிப்பறையைக் காணவில்லை. அப்படியே இருந்தாலும் அது அழையா விருந்தாளியாய் நம்மை விரட்டும். ஒரு விடுதி இருந்தது . உள்ளே நுழைந்து பாத்ரோம்' என்றேன் . அவள் வலது பக்கம் கையை காட்டினாள். படியேறியதும் சீருடை அணிந்த பெண்கள் பலர் லோபியின் சோபாவில் அமர்ந்தும் படுத்தும் கிடந்தனர். என்னைப் பார்த்ததும் எழுந்து " கம் கம்" என்று அன்பொழுக அழைத்தார்கள். நான் அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டேன். இளம் வயதில் என் நண்பனை கொனோரியா நோயில் பார்த்த அச்சம் என்னை  விரட்டியபடியே இருக்கிறது) "ஏன் கழிப்பறை போகவில்லை?" பானு கேட்டார். அங்கே பெண்கள் சீருடையில் அமர்ந்து என்னை அழைத்தார்கள் என்றேன். எனக்கு ஒவ்வவில்லை திரும்பிவிட்டேன் என்றேன். தாய்லாந்தில் இதெல்லாம் சகஜம்யா? அவளுங்க அவளுங்க வேலைய செய்றாளுங்க, நீங்க உங்க வேலைய முடிச்சிட்டு வரவேண்டியதுதானே என்றார். "என்னால் அப்படி முடியாது," என்றேன். அவளுங்க ஏன் சீருடை போட்டிருக்காளுங்க? சீருடை அணிவது ஒழுங்கின் குற

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்

              என் மனைவி தமிழ் நாட்டு சுற்றுப் பயணத்துக்கு அனுப்பியிருந்தேன். எனக்கு சேலை கடையென்றால் அலர்ஜி. இரண்டு மூன்று நாட்கள் முழுக்க கால்கடுக்க சேலைக்கடையிலும் , கடைத்தெருவில் அலைவதை நினைத்தாலே கால்கள் கடுக்கத் தொடங்கிவிடும். மகள் குடும்பத்தோடு அவள் ஜூலை 29ல் போய்விட்டிருந்தாள். கிட்டதட்ட 11 நாட்களை எப்படிக் கழிப்பது என்ற பிரச்னை. நீண்ட நாட்களாவே பானு விடுமுறையைக் கழிக்க சொங்க்லாக்-தாய்லாந்து போகலாம் என்று அழைத்துக் கொண்டிருந்தார். நான் நாலைந்து முறை பார்த்த  ஊர்தான். மிகுந்த ஆரவ்மில்லை. காரில் போய்விட்டு வருவதற்கு உசிதாமான இடம். இரண்டரை மணி நேரப் பயணம்தான். எனக்கும் போரடித்துக் கொண்டிருந்தது. சரியென்று பானுவோடு கிளம்பிவிட்டேன். மனைவி இல்லாத வேளையில் பானுவோடா? அதுவும் தாய்லாந்துக்கா? என்ற உங்கள் எண்ணம் கோணாலாவது தெரிகிறது. பானு என் நடைப் பயிற்சி நண்பர். ஆடவர். பானு  நாயர். போதுமா? 2 ஜூலை காலை 7.30க்கெல்லாம் என்னை என் வீட்டில் ஏற்றிக்கொண்டு கிளம்பி விட்டார். மணி 10 வாக்கில் புக்கிட் காயு ஹீத்தாம் எல்லையை அடைந்தோம். சனிக்கிழமையாதலால் ' உல்லாச விரும்பிகள்' எல்லைச்