Skip to main content

Posts

Showing posts from January 13, 2019

எம்ஜியார் -சிறுகதை

                                                                                              எம்ஜியார்                     திரையை விலக்கி எட்டிப்பார்த்தார் எம்ஜியார். பாதி மண்டபம் நிறைந்து விட்டிருந்தது. எம்ஜியாருக்கு இப்போதே கைதட்டும் ஓசையும் ஆரவாரமும்   செவிமடல்களைச் சிலிர்க்கச் செய்தது. முன் வரிசை நாற்காலிகள் இன்னும் காலியாகவே கிடந்தன. சிறப்பு விருந்தினருக்கானது. மண்டபத்தை நாற்காலிகளை நிறைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உண்டாக்கும் உற்சாகத் துக்கு முரணான சுபாவம் கொண்டது இந்த முன் வரிசை நாற்காலிகள்.   இன்னும் சற்று நேரத்தில் நிகழ்ச்சி துவங்கிவிடலாம். அல்லது நாற்காலிகள் நிறைய காத்திருந்து தாமதித்தும் தொடங்கலாம். சிரம்பான் போவதற்கும் டிக்கட் எடுத்தாயிற்று.     நள்ளிரவு 12.00க்குத் திரும்ப பே ரு ந்து டிக்கட் வாங்கியாயிற்று . பத்து நிமிடங்ளுக்கு முன்னாலேயே பேருந்து நிலையத்துக்கு வந்துவிட வேண்டும் .அது டிக்கெட்டின் கட்டளை. காலை ஆறு மணிக்குத்தான் திரும்பப் போய்ச் சிரம்பான் சேரும். தன் பையிலிருந்த நெளிந்து நெகிழ்ந்து நெளிந்த்து , மடிப்புக்கு அடங்கமாட்டேன் என்று வில்ல

பெண்ணே ஓடிப்போய்விடு....

            பெண்ணே ஓடிப்போய்விடு      தென்னாப்பிரிக்காவில், சோமாளியாவின்  ஒரு கிராமத்திலிருந்து ஒரு பதிமூன்று  வயதுப்பெண் அந்த ஊரைவிட்டே ஓடிப்போவதாக முதல் அத்தியாயம் விறுவிறுப்பாகத் தொடங்குகிறது. பாலைவன மணலின் தகிப்பு ஒருபுறம், தன்னை விரட்டி வருபவரிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பீதி இன்னொரு புறம். செருப்புப் போடாத பாதங்களைச் சுடுமணல் சுட்டெரிக்க சுட்டெரிக்க ஓடி வருகிறாள். பாதங்கள் பழுத்துச் சிவந்து கொப்பளிக்கின்றன. சில இடங்கள் புதை மணல் காலை மேலிழுத்து மூச்செரிக்க பின்னால் திரும்பி பார்த்தவாறே தொடர்ந்து ஓட்டம் பிடிக்கிறாள்.  வெயில் தனலின் சூடு உதட்டை பாலம் பாலாமாக வெடித்து வெளிறச் செய்துவிடுகிறது.தண்ணீரைக் கெஞ்சுகிறது தொண்டை. வியர்வை முற்றிலும் நின்றுவிட்ட அளவுக்கு உடல்நீர் வற்றிவிடுகிறது. கால்கள் இற்றுப்போய்விட்ட தளர்ச்சி. ஆனால் அவள் ஓட்டத்தை மட்டும் நிறுத்தவில்லை. இப்படியே ஓடி ஓடி, ஓடிய களைப்பில், கால்கள் வலுவிழந்து உயிர் போனாலும் போகட்டுமே, அவர் கைகளில் மட்டும் சிக்கிவிடக்கூடாது என்ற பிடிவாதத்தில் நிற்காமல் ஓடி வருகிறாள். உடல் இதற்கு மேல் முடியாது ஓய்வை யாசிக்கிறது! ஆப்பிரிக்க வ