2. சை.பீர் அவர்களுக்கு உடல் நலம் குன்றி வருவதை அவரோடு உரையாடுவதிலிருந்து தெரிந்து கொண்டேன். மிகுந்த சோர்வாக இருந்தார். குரல் உற்சாகம் குன்றி ஒலித்தது. நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். உங்கள் புலனத்துக்கு அனுப்பிவைக்கிறேன் என்றார். கட்டுரை இலக்கிய அரசியல் தொடர்பானது. சற்று காரசாரமாக இருந்தது. கைப்பேசியிலேயே தட்டச்சு செய்திருக்கிறார். நான் சொன்னேன் கட்டுரை நல்லா வந்திருக்கு. அதனை விடாமல் தொடருங்கள் என்றேன். அவர் குரலில் இப்போது உற்சாகம் தொணித்தது.கலை வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு அவர்கள் ஈடுபட்ட கலையைப் பற்றிப் பேசும்போது அவர்கள் பரவசமடைவதைப் பார்த்திருக்கிறேன். பிறவற்றைப் பற்றி உரையாடும்போது இல்லாத மகிழ்ச்சி அவர்கள் சார்ந்த கலை இயக்கத்தைத் தொட்டுப் பேசும்போது முகிழ்ந்துவிடும். இது கலை நமக்குத் தருகின்ற பிரத்தியேக உற்சாக உணர்வு. நான் சை பீரிடம் நீங்கள் விடாமல் எதையாவது எழுதிக் கொண்டே இருங்கள். அந்தப் படைப்பை எழுதி முடிக்கும்போதும் பிறர் வாசிப்புக்குப் போகும்போது, அது பற்றிப் பேசப்படும் போதும் நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியும் என்றேன். அவர் நான் இந்தக் கட்டுரையை முடித்து நூலாக...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)