Skip to main content

Posts

Showing posts with the label ஜோர்ஜ்டவுன் ஆனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்.

ஹோர்ஜ்டவுன் ஆனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்.

6. ஜோர்ஜ்டவுன் ஆனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்.     நான் நீண்ட படைப்பிலக்கியம் எழுதுவதில் விருப்பம் இல்லாதவன். என் விருப்பம் அதுவாக இருந்தாலும், நான் ஒன்றைக் கூர்ந்து கவனிக்கிறேன் தொடங்கிவிட்டால் படைப்பு நம்மைத் தொடர்ந்து எழுத அறைகூவல் விடுத்துக்கொண்டே இருக்கும். அதுதான் கலையின் மகத்துவம்.தொடங்கியவுடனே நம் சிந்தனை முன்னோக்கிப் பாய்ந்துகொண்டே இருக்கிறது.இவ்வளவு அனுபவங்களா என்றே நாம் பிரமிக்கிறோம். நாம் கடந்துவந்த உப்புக்குதவாத செய்லகள்கூட அழகியலால் கவித்துவத்தால் அவை வாசிக்கத் தகுந்த சுவாரஸ்யத்தை தனக்குள்ளே புதைத்துவைத்துக்கொண்டு எழுதும்போது இன்னும் சீற்றத்தோடு வெளிப்பட்டுவிடுகின்றன. இயல்பாகவே கடிவாளம் இழுக்கப்பட்டவுடன் முன்னோக்கிப் பாயும் மனித சிந்தனை, படைப்பாற்றலின் வெளிப்பாடு, அதற்கு ஈடாக இயங்கும் மொழி நீண்ட படைப்புக்கு வழி வகுத்துவிடுகிறது. எனக்கு நாவல் எழுத வராது என்று என் நண்பர் சொன்னவுடன் நான் இதைத்தான் சொன்னேன். முதல் அத்தியாயத்தை எழுதிவிடுங்கள் பின்னர் அதுவாகவே இழுத்துவைத்துக்கொண்டு முன்னோக்கி செல்ல உந்தும் என்று. கலை மனிதனுக்குக் கொடுப்பது பரவசம் மட்டு...