மெய்யழகன் திரை விமர்சனம். மெய்யழகன் திரைப்படத்தை ஓர் எளிமையான கதைக்களம் என முதலில் நினைத்தேன். அந்தக் கதை திரையில் வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்றே புறமொதுக்கினேன். ஏனெனில் அது ஒரு சிறுகதைக்கான ஒரு குறுகிய வடிவம் கொண்டது. இரண்டே இரண்டு மையப் பாத்திரங்களே போதுமானது, சிறுகதையாக வடித்திருந்தால் . இதற்கு சினிமா என்ற விரிவான தளம் தேவையற்றது என்ற என் மதிப்பீடு குறையானது எனப் புரியவைத்த படம் மெய்யழகன் . திரைக்காக அவர் இணைத்த உப காட்சிகளும் துணை பாத்திரங்களும் அதனை கவித்துவமாக்கியிருக்கிறது. காட்சி ஊடகமாக வந்த பின்னர் 'மெய்யழ்கன்' ஒரு காவியமாக விரிவுகொண்டு துலங்கி வந்திருப்பது வியப்பூட்டியது. பிரேம் குமார் போன்ற தேர்ந்த இயக்குனரால் மட்டுமே ஆகக்கூடிய சாதனை இது. பால்ய காலத்தில் அணுக்கமான பழக்கத்துக்குப் பின்னர் அருள்மொழியும் கார்த்தியும் சந்தித்துக்கொள்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது. அருள்மொழியின் மனம் அந்தச் சிறார் பருவ சம்பவங்களை முற்றாக மறந்தவிட்ட நிலையில் கார்த்தியை ஒரு திருமண விருந்துபசரிப்பில் மீண்டும் சந்திக்க நேர்கிறது. திருமண விருந்து நிகச்சிக்கு வந்த அருள் மொழியை (அரவி
எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் நவீன எழுத்துலகின் ஆளுமை எஸ் , ராமகிருஷ்ணன் மலேசிய வருகையை முன்னிட்டு இப்பதிவு நவீன தமிழ் எழுத்துலகின் தவிர்க்க முடியாத ஆளுமை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். இன்றைக்கு இருக்கும் தமிழின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். எஸ்ரா எழுதத்தொடங்கிய 1984 முதல் இன்றுவரை இடைவிடாமல் எழுதிவருகிறார். அவருடைய முதல் படைப்பு ‘ பழைய தண்டவாளம் ’ என்ற சிறுகதை கனையாழி மாத இதழில் வெளியாகித் தன் படைப்புலக நுழைவை தகவமைத்தார். அதற்குப் பின்னர் அவரை வலிமையாக அடையாளம் காட்டிய ‘ துணையெழுத்து ’ என்ற இலக்கியக் கட்டுரைத் தொடர் ஆனந்த விகடன் வார இதழில் வெளியாகி பரவலான வாசக கவனத்தைப் பெற்றது , கதாவிலாசம் , தேசாந்திரி , கேள்விக்குறி ஆகிய கட்டுரைத் தொடர்கள் தொடர்ந்து ஆனந்தவிகடன் இதழ் பிரசுரித்தது .இலக்கிய உலகின் மிகப்பெரிய ஆளுமையாக தன்னை நிறுவிக்கொண்டே இருந்தார். கட்டுரைத் தொடர்கள் அவரின் தொடக்க கால எழுத்து வகைக்குச் சான்று என்றாலும் , அவர் புனைவெழுத்திலும் தன்னைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருந்தார். நூற்றுக் கணக்கான சிறுகதைகள் இடைவிடாமல் எழுதி வந்தாலும். இலக்கியத்தின் அனைத்த