Skip to main content

Posts

Showing posts from September 1, 2024

தங்கலான் சுரண்டலின் எதிர்வினை

                                                     ப.ரஞ்சித்தின்                         தங்கலான் திரைப்படம் சுரண்டலின்                                                       எதிர்வினை                  1760 முதல் 1840 வரையிலான ஐரோப்பிய மறுமலர்ச்சி காலக்கட்டத்தில்தான் ஆசிய நாடுகள் பெருவாரியான சுரண்டலுக்குள்ளாக்கப்பட்டன. இந்த நூற்றாண்டில்தான் ஐரோப்பிய நாட்டுகளில் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. பலவகையான இயந்திரங்களின் கண்டுபிடிப்புகள் மனித ஆற்றல் பயன்பாட்டை எளிமாயாக்கும் வண்ணம் இயந்திரங்கள் புழக்கத்துக்கு வருகின்றன. அவ்வகை இயந்திரங்கள் மனித பயன்பாட்டுக்காக ஏராளமான எண்ணிக்கையில் தயார் செய்ய வேண்டிய கட்டாயம் நிகழ்கிறது. மேலை நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு இயந்திரங்களை உருவாக்குகின்றன.அவர்கள் உற்பத்திக்கான கனிம பொருட்களின் போதாமையே அப்போது அவர்கள் எதிர்கொண்ட பெரும் சிக்கல். அவர்கள் தேடிய கனிமவலம் நிறைந்த நாடுகளின் இந்திய நிலத்தில் கொழித்துக் கிடப்பதாகக் கண்டிறிகிறார்கள். எனவே ஐரோப்பியர்களில் பெரும்பாலும் ஆங்கிலேயர்களே  இந்திய நிலத்துக்குப் படை எடுக்கிறார்கள். இரும்பு தங்கம் பித்தலை ஈயம்