மாடுகள் மலைகள் ஏரிகள் ~ 3 நாங்கள் தங்கும் விடுதியெல்லாம் சற்றேறக் குறைய வீடு போன்ற அமைப்பைக் கொண்டது. சமையல் அறை , அதற்கான தளவாடங்கள் , துணி துவைக்கும் இயந்திரம் என பெரும்பாலான வசதி கொண்ட இடம். மறுநாள் வெகுதூரம் பயணமாக வேண்டும் . வாய்க்கு ருசியாக உணவு கிடைப்பது கடினம். இடையில் உணவுக்காக நிறுத்தினால் சுற்றுலாத் தளங்களைப் பார்க்க முடியாது. எனவே காலை உணவு விடுதியிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். ரொட்டி , சீஸ் , துனா சாடின் , முட்டை , பால் . சீனி , நெஸ்கேப்பி போன்ற உடனடி உணவு வகையை அன்றிரவே வாங்கிக் கொண்டோம். என் மனைவியும் செல்வியும் அன்றைக்கான உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். ரோத்தொருவா எனும் புகழ்பெற்ற நீர்வீச்சி சுற்றுளாத் தளம் எங்களின் அடுத்த இலக்கு. பகல் உணவு நேரம் நெருங்கும்போது நாம் ஒரு சிறிய பட்டணத்தை அடைவோம் என்றார் மருமகன். நாங்கள் கிளம்பும் போது காலை மணி எட்டு. ஆனால் வேன் சில இயந்திரப் பிரச்னைகளைக் சமிக்ஞை செய்தது. வெகுதூரப் பயணமாதலால் சரி செய்துவிட வேண்டும் என்று அங்குள்ள கிளை அலுவலகத்துக்குச் ச...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)