Skip to main content

Posts

இனப்படுகொலையும் அரசை நம்பாத மாணவர்களும்

( முகநூலிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது)   மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்! ம.செந்தமிழன் மாணவப் போராளிகளே, 2009, மார்ச் மாதம் நடந்திருக்க வேண்டிய போராட்டங்கள், இப்போது நடக்கின்றன. அந்தக் காலத்தில்தான், புலிகளின் படையை இந்தியச் சதி சுற்றி வளைக்கத் தொடங்கியிருந்தது. இந்தியக் கடற்படை, இலங்கைத் தீவைச் சுற்றி நின்று அரண் அமைத்து கடற்புலிகளைக் காவு வாங்கியது. கடல் வழியே தப்பிச் செல்ல முனைந்த பொதுமக்களுக்கும் கடல் வழியை மறுத்தது இந்தியக் கடற்படை. நிலப்பகுதிகளோ, சிங்களப் படையின் பெரும் எண்ணிக்கையினால் சுற்றி வளைத்து மூடப்பட்டது. வீரம் செறிந்த தாக்குதல்களைப் புலிகள் நடத்தியபோதும், வான்வழியே பறந்து கொத்துக் குண்டுகள் வீசி, புலிகளின் அனைத்து நிலைகளும் அழிக்கப்பட்டன. ஒருபுறம் கிளிநொச்சியிலிருந்து மாதக் கணக்கில் நடந்தே வந்து சேர்ந்த பொதுமக்கள், மறுபுறம் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் முற்றுகை. புலிகளின் அப்போதைய நிலையை உலகின் எந்த மனிதனாலும் கற்பனையிலும் காண இயலாது. உணவுப் பஞ்சம், தண்ணீர் பஞ்சம், மருந்துகள் இல்லை, கை கால்கள் முறிந்தவர்க...

மரணம் குறித்த முன் சமிக்ஞைகள்

                                                         கவிஞர் பா.அ.சிவம்             பா. அ. சிவம் எனக்கு அறிமுகமானது தொலைபேசி வழியே. குரலை வைத்து அவர் முகம் இன்னெதென்று அனுமானிக்க முடியாததாக இருந்தது. ஆனாலும் மனம் அவர்க்கொரு முகத்தை வரைந்தபடி இருந்தது. அவர் பெயரை வைத்து , குரலை வைத்து அந்த ஓவியம் உருவாகிக்கொண்டிருந்தது. நமக்குப் பிரியமானவரின் முகத்தைப் பார்க்கும் ஆவலில் இப்படியான சித்திரங்கள் நம் மனம் வரைந்துகொள்வது இயல்புதானே! “மலாயாப் பல்கலைக் கழக பேரவைச் சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் எழுதிய சிறுகதை  பரிசுக்குத் தேர்வு பெற்றிருக்கிறது, நீங்கள் நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்” என்று அழைத்துச் சொல்லியிருந்தார். அந்த ஆண்டு அவர் பேரவையின்...

வேட்பாளர்கள் வீ.ஆ.வேவும் சிக்ஸ் ஸ்டாரும்

                                (3.3.2013 ஞாயிறு குரலில் வெளியானது) உள்ள படியே அவர் பெயர் அதுவல்ல. பிறப்புப் பத்திரத்தில் செங்கல்ராயன் என்ற கல்வெட்டு போல பத்திரமாகவே  பதிவாகியிருக்கிறது. கடந்த தேர்தலில் வீசிய அரசியல் புயலில் ஆளுங்கட்சி, வயசான கிழவனின் பல் ஆட்டங்கண்டது போல தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி வைத்திய வாக்களிப்பில் கொஞ்சம்.. கொஞ்சமென்ன ? அடித்தலமே ஆடித்தான் போனது.    மனிதன் இறந்தும் சீக்கிரத்தில் அழியாத ஒரே உறுப்பு பல் தானாம். அதுவே ஆட்டங்காணும் போது அல்லக்கை அகந்தை  நிலைகுலையாதா என்ன?    ஒரு அரை நூற்றாண்டாக ஆட்சி பீடத்தைச் சக்கரவர்த்தியின்  அகந்தையோடு பரிபாலனம் செய்ததற்கு  அது நல்ல பாடமென்றே பரவலாகப் பேசப்பட்டது. அந்தத் தேர்தல்தான் தமிழர்கள் நிறைய பேர் களமிறக்கி கரை சேர்ந்திருந்தது. அந்த அலையில்தான் செங்கல் ராயன் தன் பேரை மாற்றி வீர ஆவேச வேங்கை என்ற மறு அவதாரம் எடுத்திருந்தார்....

13. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்

மீண்டும் மலேசியா திரும்பு நாள் அன்று (26.12.2012.) எங்கள் பயண நேரம் காலை மணி 11.00 என்றுதான் ஏர் ஏசியா தொடக்கத்தில் கொடுத்திருந்தது. ஆனால் பயணம் செய்ய இரண்டு வாரத்துக்கு முன்னர் அதனை பின்னிரவு மணி 1.00 தள்ளி வைத்துவிட்டது. ஏர் ஏசியா அடிக்கடி செய்யும் கோளாறு இது. இதற்கு கேள்வி முறையெல்லாம் கிடையாது. பயணச்சீட்டு சட்டதிட்டத்தில் அப்படித்தான் உள்ளது! விடுதி அறைகள் முன்னமேயே பதிவு செய்து விட்டாதால்.. மேலும் ஒரு நாளைக்கு நீட்டித்தாக வேண்டும். ஒவ்வொரு அறையும் மலேசிய ரிங்கிட் 850.00. ஏர் ஏசிய செய்த தள்ளிவைப்பு எங்கள் பணத்துக்கு வைத்த கொல்லி வைப்பு! என்ன செய்யலாம் என்று யோசித்த பிறகு அன்றைக்கு மேலும் ஒரு இடத்தைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் வெகு தூரம் உள்ள இடத்தையே பரிந்துரை செய்தார் மைக்கல். அதற்கான கட்டணமும் அதிகம்.குளிர்ப்பபனி மெலும் கனத்திருந்தது. சாலையோ வழுக்கும். தாமதமானால் விமானத்தைப் பிடிக்கமுடியாது. என்ன செய்யலாம்? என்னையும் என் மனைவி மகள், ஒரு மருமகளை விடுதியில் ஓர் அறையில் விட்டு விட்டு மற்ற அனைவரும் பனிச்சருக்கு விளையாட்டுக்கு போவதாய் இறுத...

12. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்.

                                   சொர்க்கத்தின் கோயில் முன்                                      சொர்க்கத்தின் கோயில்                                                     ஒலிம்பிக் கிராமம்                                ...

11.சீனப்பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்

                                                  தியானமென் வளாகம்           3 மணிநேரம் ஒரே இடத்தில்  அசையாமல் நிற்கும் குங்பு போலிஸ் மறுநாள் காலையில் சீனச் சரித்திரத்தில் ஒரு கரும் புள்ளி விழுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைக்காணப் புறப்பட்டோம். உள்ளபடியே இந்த இடத்தைப் பார்க்கவேண்டும் என்பதே என் நெடு நாளைய ஆசை.சீன வரலாற்றை புரட்டிப்போட்டு உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கவைத்த ரத்தக்களரி நடந்த இடம் அது.  பயணம் போகும் போது மைக்கலைk கேட்டேன். அதுபற்றிப் பேசுவதே ஒரு தேசக் குற்றம். வேண்டாம் அங்கே போய் அதெல்லாம் பேசவேண்டாம் என்று எச்சரித்தார். உலகமே அன்றைய சீன அரசை வன்மையாகக் கண்டித்த சம்பவம் அது. அனைவருக்கும் தெரிந்த மயிர்கூச்சரியும் சம்பவமாயிற்றே. பேசாக் கூடாது என்றால் என்...

10. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்

                                       வேனில் இருந்து பார்க்கும் போதே அதன் பிரம்மாண்டம் மலைக்க வைத்தது. மலை உச்சி முனைகளில் பெரும் பாலமாக தொடர்ச்சியாக  முடிவற்று நகர்கிறது பெ ரு ஞ் சு வர். .            வேனிலிருந்து இறங்கி, ஒரு மேடான நிலப்பகுதியில் ஏறி உச்சிக்குச் சென்று கேபல் காருக்காக டிக்கெட் எடுத்துக் கொண்டோம். பெருஞ்சுவரை அடையும் முன்னர் இரு மருங்கிலும் நிறைய நினைவுபொருட்களை விற்கும் கடைகள். அங்கே பலர் ஆங்கிலம் நன்றாகப் பேசுகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடங்களிலெல்லாம் ஆங்கிலம் பேசும் சீனர்களைப் பார்க்க முடிகிறது. உணவு விடுதியில் நமக்கு என்ன வேண்டுமென்பதை சைகை மொழியில்தான் சொல்லவேண்டும். அல்லது மெனுவைக் காட்டிதான் ஆர்டர் கொடுக்கவேண்டும். ஏனெனில் பறப்பன, நடப்பன, ஊர்வன  எல்லாவற்றையும் விதம் விதமாக சமைத்து உண்ணும் இனம் சீன இன...