Skip to main content

கவிதை: மிதந்துகொண்டிருக்கும் வார்த்தைகள்

விட்டுப்பிரியும்
நண்பர்களைவிடவும்
அறையில் மிதந்துகொண்டிருக்கும்
அந்த உரையாடல்களை .................

அட்டமத்தில் வியாழனனும்
ஏழரை சனியனும்
செவ்வாயில் தோஷமும்
மென்னியை இறுகியிருக்கும்
நாகதோஷமும்
நாயே பேயேவும்
மக்கு மடச்சாம்பிராண்டியோ
என்னைப்புணரும் தருவாயில்
மட்டும் முற்றாய்
மூழ்கி
அமுங்கிப்போவதேனோ

............................
கூச்சமில்லாமல்
முகத்துக்கு நேரே
என்னைப்பாராட்டும்
ஒப்பனை தருணத்தில்
எனக்குப்பின்னால் பிராண்டிய
உன் வார்த்தைகள்
நீ பேசப்பேச
அழுகி உதிர்ந்துபோகிறது

கோ.புண்ணியவான்
Ko.punniavan@gmail.com

Comments

உரையாடல்களுக்கு ஒரு வடிவம் கொடுத்து, அதை மிதக்கவிடுவது கலை நேர்த்திக்குரிய பார்வை. வாழ்த்துகள்.
ko.punniavan said…
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.