Skip to main content
என் வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி,




கவிதையைப் புரிந்துகொள்ள்ளும் சிரமத்தால் பெரும்பாலான வாசகர்கள் கவிதைப்பக்கத்தைக் கடந்துவிடுகின்றனர். நீங்கள் ஆர்வம் காட்டியமை ஆறுதல் அளிக்கிறது.

கவிதைக்கு வருவோம்.
பேரங்காடிகளில் நமக்குத்தேவையான பொருட்களை விற்பதோடு நில்லாமல் நமக்குத்தேவையற்ற பொருட்களையும் கவர்ச்சியாக காட்சிப்படுத்துகின்றன. அந்த கவர்ச்சியில் ஈர்க்கப்பட்ட நாம் நமக்குத் தேவையற்றது என்பதை கவனத்தில் கொள்ளாமல். புறக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு பணம் செலவு செய்து அவற்றை வாங்கிவிடுகிறோம். நம்மை வாங்கவைக்கவே அவை கவர்ச்சியாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இது ஒரு வகையில் பகற்கொள்ளைதான். கவிஞன் அன்றைய அனுபவ நீட்சியைக் கவிதையாக எழுதவேண்டுமென்று நினைக்கிறான். ஆனால் வீட்டில் தன் குழந்தைகள் அவனை ஆர்வத்தோடு வரவேற்கும்போது அவன் எழுத நினைத்த கவிதை வரிகள் குழந்தைகளின் வரவேற்பால் மறந்தே போகிறான். பேரங்காடிப்பொருட்கள் அவன் பணத்தைக் களவாடிவிட்டதுபோல குழந்தைகளின் ஆர்வ நிலை அவன் கவிதையைக் ‘களவாடிவிடுகிறது’



என் வலைப்பூவை உங்கள் ஆசிரியர்களிடம் அறிமுகம் செய்யுங்கள்.

எழுத்தாளர் ஒருவர் ஒரு ஏழை புத்தக வியாபாரியை பணம்கொடுக்காமல் அலைக்கழிக்கவைத்த ஒரு சுவாரஸ்யமான புனைக்கதை எழுதப்போகிறேன். தொடர்ந்து வாசியுங்கள்.

இப்படி இன்னும் நிறைய.......

Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.

 சீ.முத்துசாமி தேர்ந்தெடுத்த எழுத்திலக்கு வெல்லும் இலக்கு.   சீ.முத்துசாமி அறிமுகமான தொடக்க காலம்தொட்டே எனக்கும் அவருக்குமான விலகல் தொடங்கிவிட்டிருந்தது .அது என்ன காரணத்தினால் என்று என்னால் அருதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை. சம வயது கலைஞர்களுக்கே உரித்தான காழ்ப்பு மன இயல்பாகக் கூட இருக்கலாம். அவர் யாரிடமும் நெருக்கமாக பழகும் குணமுடையவர் அல்ல. எம் ஏ இளஞ்செல்வனும் அவரும் சமகாலக் கலைஞர்களாக இருந்தாலும் அவர்களிடையேகூட விலகல் இருந்துகொண்டே இருந்ததை நான் அவதானித்தேன். சீ.முத்துசாமி ஒரு தனிமை விரும்பி. சொற்களை அளந்து பேசுபவர். சக நண்பர்கள் விரும்பாத தொனியில் சொற்களை உபயோகிப்பவர். இந்தக் காரணங்களின் பொருட்டே அவர் தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்..அது சில தனிமனிதர்களின் இயல்பு என்று பின்னாளில் புரிந்துகொண்டேன்.  எனக்கும் அவருக்குமான விரிசல் ஒரு சந்தர்ப்பத்தில் விஸ்வரூபம் எடுத்தது. நான் 1995 முதல் 2005 வரையில் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தேன். நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி அல்ல அது. என்னிடம் வற்புறுத்தி கொடுக்கப்பட்ட ஒரு பணி. லாங்காவியில் ஐந்து ஆண்டுகால ...